அன்பும், அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.
அன்பான சகோதர,சகோதரிகளே!நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய நம்பிக்கையில் நிலைத்திருந்து நம்மையே சோதித்து பார்த்து நம் நடக்கையை சீர்தூக்கிப் பார்ப்போம். ஒருவருக்கொருவர் மன ஒற்றுமையுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து அமைதியுடனும்,பொறுமையுடனும் வாழும் பொழுது நமது ஆண்டவரும் நமக்கு தமது அன்பையும், அமைதியையும் அளித்து நம்மோடு கூடவே இருந்து நாம் செல்லும் இடமெங்கும் நமது கரம் பிடித்து வழிநடத்தி நாம் விரும்பி கேட்கும் யாவையும் கொடுத்து நமது மனவிருப்பங்கள் முழுவதையும் நிறைவேற்றி நம்மை அரவணைத்து, ஆசீர்வதித்து காத்தருள்வார். கர்த்தர் உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். அதுபோல் நாமும் ஒருவடோருவர் அன்பு வைத்தால் அவருடைய பிள்ளைகளாய் அவருடைய பிள்ளைகள் என்ற நற்சாட்சியை பெற்று வாழலாம். ஏனெனில் நாம் இயேசுவினிடத்தில் நம்பிக்கை கொண்டால் அவரை அனுப்பிய பிதாவினிடத்திலும் நம்பிக்கை கொள்கிறோம். அவரை யூதாஸ் காட்டிக்கொடுப்பது தெரிந்தும் அவனை ஆண்டவர் வெறுக்கவில்லை. அவனை சிநேகதனே நீ செய்ய வேண்டியதை சீக்கிரமாய் செய் என்றே கூறி முடிவு...