ஆண்டவரைத் தேடுவோர் கண்டடைவர்
கேளுங்கள்,உங்களுக்கு கொடுக்கப்படும்;தேடுங்கள்,கண்டடைவீர்கள்.தட்டுங்கள்,உங்களுக்கு திறக்கப்படும்.ஏனெனில் கேட்போர் எல்லோரும் பெற்றுக்கொள்கின்றனர்.தேடுவோர் கண்டடைகின்றனர்.தட்டுவோருக்கு திறக்கப்படும்.உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தை கேட்கும் உங்கள் பிள்ளைக்கு கல்லை கொடுப்பீர்களா? அல்லது அந்தப்பிள்ளை மீன் வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதிலாக பாம்பை கொடுப்போமா?நாமே நம்முடைய பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்பதை கொடுக்கும் பொழுது விண்ணையும்,மண்ணையும் உண்டாக்கிய கடவுள் நாம் கேட்கும் பொழுது கொடுக்காமல் இருப்பாரா?நிச்சயம் கொடுப்பார்.நாம் கேட்க வேண்டிய முறையில் கேட்டால் நமக்கு இல்லை என்று சொல்லவே மாட்டார். யோவான் 14 : 13 ,14, ஆகிய வசனங்களில் நாம் வாசிப்பது என்ன?நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்,என்று சொல்கிறார். நாம் மறந்தாலும் நம்மை ஒருபோதும் மறக்காத இயேசு நாம் கேட்பதை கொடுத்து ஆசீர்வதிப்பார்.அதற்கு நாம் அவரைத் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்.என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டு பிடிப்பார்கள் என்றும் எழுதியிருக்கிறது. ஆண்டவரிடமே செல்வமும்,மென்மையும்,அழியாப் பொருளும் அனைத்து...