உண்டார்கள், குடித்தார்கள் !
நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் இயேசு, வரலாற்றிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். நோவாவின் காலத்தில் மக்கள் இறையச்சம் இன்றி உண்டும், குடித்தும் வந்தார்கள். லோத்தின் காலத்திலும் இறைவனின் கட்டளைகளை மக்கள் மறந்தார்கள். உண்டார்கள், குடித்தார்கள். வாங்கினார்கள், விற்றார்கள். நட்டார்கள், கட்டினார்கள். அதாவது, இந்த உலகின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருந்தார்கள், ஆனால், விண்ணக வாழ்வுக்குரிய செயல்பாடுகளை மறந்தார்கள் அல்லது புறக்கணித்தார்கள். எனவே, அழிந்தார்கள். எனவே, எச்சரி;க்கையாயிருங்கள் என்கிறார் இயேசு. இந்த 21ஆம் நூற்றாண்டில் பழைய காலத் தவறுகளையே நாம் மீண்டும் செய்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது காலத்திலும் மக்கள் அலுவலகம் செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும், கடன் வாங்கி வீடு கட்டுவதிலும், வணிகம் செய்வதிலும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் செலவழிக்கும் நேரமும், அக்கறையும் இறைவனுக்குரிய , இறையாட்சிக்குரியவற்றில் செலவழிப்பதில்லை. எனவே, நோவாவின் காலத்தில் நடைபெற்றது போல, லோத்தின் காலத்தில் நடைபெற்றது போல, அழிவுக்குரிய செயல்கள் நமக்கும்...