மரியாளின் விண்ணேற்பு
நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின்படி, பைசாண்டின் அரசில், மரியாளின் இறப்பு தினம், மிகப்பெரிய விழாவாக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் எருசலேமிலிருந்து கொண்டு வரப்பட்ட வாசக நூலும், அதன் ஆர்மீனிய மொழிபெயர்ப்பு நூலும், ஆகஸ்டு மாதம் 15 ம் நாளை, மரியாளின் விண்ணேற்பு நாளாக அறிவிக்கின்றன. இதுவே அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான தொடக்ககால சான்றாகும். திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் மரியாளின் வி்ண்ணேற்றம் என்ற திருமறைக்கோட்பாட்டை, நவம்பர் 1, 1950 ல் பிரகடனப்படுத்தினார். இது விசுவாசத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். திருவிவிலியத்தில் இறப்பு என்பது பாவத்தின் விளைவாகும். மரியாள் அமல உற்பவி என்பதால், அவள் பாவமின்றி பிறந்தவள். ஆகவே, மரியாள் பாவத்திற்கான விளைவை முறியடித்தவள். ஆதலால், மரியாளின் அமல உற்பவ பெருவிழாவானது, மரியாளின் விண்ணேற்றப் பெருவிழாவோடு நெருங்கிய இறையியல் தொடர்புடையது. மரியாள் பாவத்திலிருந்து விலிகியிருந்ததால், இறைவனின் மாட்சிமையில் பங்குபெற்றார். மரியாளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிற நாமும், அன்னை...