துருவங்களை இணைப்பவர் இயேசு
தொழுகைக்கூடத்தில் இயேசுவுக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவிடம் குற்றம் காண நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இயேசு தனது போதனை தளத்தை மாற்ற ஆரம்பிக்கிறார். தொழுகைக்கூடத்திலிருந்து, கடற்கரையிலும், தெருக்களிலும், ஆலயத்திலும் அவர் போதிக்கத்தொடங்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில், போதகர்களுக்கு பணிவிடை செய்வது என்பது ஆசீர்வாதமான செயலாகக் கருதப்பட்டது. போதகர்கள் செல்கிறபோது, அவரோடு உடனிருந்து, அவருக்குத்தேவையானவற்றை செய்து தருவதற்கு பலர் தானாகவே முன்வந்தனர். இயேசுவோடு பெண்களும் உடனிருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். இயேசுவோடு உடனிருந்த பெண்களில் முக்கியமானவர்கள் மகதலா மரியாவும், யோவன்னாவும். இந்த மகதலாவிடமிருந்து இயேசு பல பேய்களை ஓட்டியிருந்தார். அவருடைய கடந்த கால வாழ்க்கை ஒரு பாவ வாழ்க்கை. அவரோடு யோவன்னாவும் இருந்தார். இந்த யோவன்னா, ஏரோதுவின் மாளிகையில் மேற்பார்வையாளராக இருந்த கூசாவின் மனைவி. மேற்பார்வையாளர் பணி அதிகாரம் மிகுந்த பணி. அரசருடைய அனைத்து உடைமைகளுக்கும் பொறுப்பு இவராவார். அரசரின் மதிப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற ஒருவர் தான்...