பணிப்பொறுப்பு
பெரிய ஏரோது தனது காலத்தில், அனைவரையும் சந்தேகிக்கிறவனாகவே வாழ்ந்து இறந்தான். தனது மனைவியரை மட்டுமல்ல, தனது பிள்ளைகளையும் அவன் கொன்றொழித்தான். தனது அரசிற்கு எதிராக யார் தடையாக இருப்பதாகத்தோன்றினாலும், அவர்களை கொலை செய்தான். பெரிய ஏரோதிற்குப்பிறகு அவன் ஆட்சி செய்த பகுதிகள் மூன்று நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவனுடைய மூன்று பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவன் தான் குறுநில மன்னன் என்று நற்செய்தியாளரால் சொல்லப்படுகிற ஏரோது அரசன். இவன் ஏரோது அந்திபாஸ் என்று அழைக்கப்பட்டான். கலிலேயா மற்றும் பெரியா பகுதிகளை இவன் ஆட்சி செய்து வந்தான். இயேசு கலிலேயர் என்பதால், இயேசுவினுடைய அரசரும் இந்த ஏரோதுதான். எனவே தான், பிலாத்து முதலில் இயேசுவை, முதலில் இவனிடம் அனுப்பினான். ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப்போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்று லூக்கா 13: 32ல் சொல்வது இவனைப்பற்றித்தான். ஏனெனில், இந்த ஏரோது...