Tagged: இன்றைய சிந்தனை

கடவுளோடு இணைந்திருப்போம்

எண் 72 என்பது யூதர்களுக்கு ஓர் அடையாள எண். மூப்பர்கள் 72 பேரை இஸ்ரயேல் மக்களுக்கு அதிகாரிகளாக, பெரியவர்களாக ஏற்படுத்துகிறார். எண்ணிக்கை 11: 16 ”ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா. அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்”. யூதத்தலைமைச்சங்கத்திலும் 72 உறுப்பினர் இருந்தார்கள். உலகத்தில் இருக்கிற மொத்தநாடுகளின் எண்ணிக்கையும் 72 இருப்பதாக யூதர்கள் நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை அனைவருக்கும் பொதுவானவராக, மீட்பராக அறிமுகப்படுத்துவதால், இந்த எண்ணைப்பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்தப்போதனை போதிக்கக்கூடியவர்களுக்கான ஒழுங்குகளைத்தருகிறது. போதிக்கக்கூடியவர்கள் பொருட்களைச் சேர்த்து வைக்க ஆசைப்படக்கூடாது. அவர்களுக்கு கடவுள் தான் சொத்து. அதேபோல போகிற வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்று சொல்லப்படுவத, தங்களுடைய இலக்கிலிருந்து அவர்கள் விலக அது காரணமாகிவிடக்கூடாது என்பதற்காக. கிறிஸ்துவை நோக்கிச்செல்கின்ற நம்மிலிருந்து நாம் எந்த காரணத்தைக்கொண்டும் விலகக்கூடாது. நமது எண்ணங்கள், சிந்தனைகள், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்துமே கிறிஸ்துவை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும்....

பயனற்ற செல்வம் !

இவ்வுலக செல்வத்திற்காக உழைப்பதனால் ஏற்படும் இழப்புகளை நாம் பட்டியல் இடலாம்: எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் இறுதியில் அது நம்மோடு வரப்போவதில்லை. வேறொருவர்தான் அதை அனுபவிக்கப்போகிறார். இவ்வுலக செல்வம் நம்மை இறைவனிடம் சேர்ப்பதில்லை. இறைவனைவிட்டுப் பிரிக்கிறது. மிகுதியான செல்வம் இருந்தாலும், நிறைவாழ்வு, மகிழ்ச்சி கிடைக்காது. மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது. இதை நாம் உணரவேண்டும். எனவே, எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு நம் எச்சரிக்கையாய் இருப்போம். இவ்வுலக செல்வத்தைச் சேர்ப்பதற்குப் பதில் இறைவனின் முன்னிலையில் செல்வம் சேர்ப்போம். நமது நல்ல எண்ணங்கள், செபங்கள், நற்செயல்களே இறைவனின் முன்னிலையில் நமது செல்வங்கள். அத்தகைய செல்வத்தின்மீது ஆர்வம் காட்டுவோம். மன்றாடுவோம்: எங்கள் ஒப்பற்ற செல்வமாகிய இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அழிந்துபோகும்;, பயனற்ற செல்வத்திற்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும் செல்வத்திற்காக உழைக்க அருள் தாரும். நீரே எம் ஒப்பற்ற செல்வமாய் இருந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். ~ அருள்தந்தை...

இடைவிடாத செபம் கேட்கப்படும்

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8) வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும். இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது...

உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12), தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும். தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும் உண்மையை,...

கடவுளின் உடனிருப்பு

கடவுளின் பராமரிப்பு இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில், இலட்சக்கணக்கான முடிகள் காணப்படுகிறது. ஆனால், அதில் விழுகிற முடிகள் கூட, கடவுளின் கண்களில் இருந்து தப்பமுடியாது என்றால், கடவுள் நம் மட்டில், எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார், எவ்வளவுக்கு நம்மை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், என்பது இங்கே தெளிவாகிறது. நம் அனைவருக்குமே ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார். அந்த காவல் தூதுவரின் பிரசன்னம், கடவுள் நம் மட்டில் வைத்திருக்கிற, பராமரிப்பின் அளவைக் காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு நாமும் காரணமாக இருக்கலாம், மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில், பிரச்சனைக்கான காரணத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் பராமரிப்பை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த பராமரிப்பின் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை தான், நமது பிரச்சனைகளிலிருந்து, நாம்...