மனஉறுதி
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் மீது பற்று உள்ளவர்களும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சோதனை, பல மடங்கு வேதனையானது. ஏனென்றால், மக்களின் கேலிப்பேச்சுக்களும், உள்ளத்தைக் காயப்படுத்தும் பேச்சுக்களும் அடிக்கடி வாழ்வில் நடக்கக்கூடியதாக இருக்கும். கடவுள், கடவுள் என்று பின்னால் சென்றானே, கடவுள் இவனுக்கு என்னதான் கொடுத்தார், என்ற எகத்தாளப் பேச்சுக்கள், மக்கள் நடுவில் அன்றாடம், நாம் பார்க்கக்கூடிய நிகழ்வு. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் செக்கரியா மாட்டிக்கொண்டார். செக்கரியாக ஒரு குரு. கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர். மக்களின் விண்ணப்பங்களை, தான் செலுத்தும் பலி மூலமாக, இறைவனிடம் எடுத்துச்சொல்கிறவர். அப்படிப்பட்ட, குருவுக்கு மிக்ப்பெரிய குறை வாழ்வில் இருந்தது. அதுதான் குழந்தை இல்லாத குறை. நிச்சயம் பலபேருடைய ஏளனத்திற்கு அவர் ஆளாகியிருப்பார். பலிசெலுத்துகிறபோதெல்லாம், தனக்காக, தன்னுடைய மனைவிக்காக மன்றாடியிருப்பார். ஆனால், ஒன்று தெளிவாகத்தெரிகிறது. அவர் சோர்ந்து போகவில்லை. உறுதியாக இருக்கிறார். எனவே தான், இத்தனை ஆண்டுகளானாலும், உண்மையான கடவுளை விட்டு விலகிச்செல்லாமல்...