இறைவனின் பிரசன்னம்
இயேசு செபிப்பதற்காக மலைக்குச் சென்றார் என்று நற்செய்தியாளர் சொல்கிறார். மலை என்பது விவிலியத்தில் உருவகமாகப் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தை. பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பாலஸ்தீனமும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் மலைப்பாங்கான இடங்களைக் கொண்டிருப்பதால், விவிலியத்தில் ஏறக்குறைய 500 க்கும் மேலாக, “மலை“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆன்மீகரீதியாக பார்க்கிறபோதும், மலை உயரமாக இருப்பதனால், அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தையாகவும் இருக்கிறது. மலை என்பது உயரமான இடம். கடவுள் விண்ணுலகில் அதாவது மேலே வானத்தில் இருக்கிறார் என்பதால், மலை என்பது விண்ணகத்தின் அருகாமையைக் (கடவுளின் அருகாமை) குறிக்கிற சொல்லாக இருக்கிறது. ஆக, மலை கடவுளின் பிரசன்னத்தை அதிகமாக, நெருக்கமாக உணரக்கூடிய இடம் என்பதுதான், இங்கே நாம் அறிய வேண்டிய ஒன்று. பழைய ஏற்பாட்லே சீனாய் மற்றும் சீயோன் மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீனாய் மலையில் தான், மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெற்றார். சீயோன் மலையில் தான் எருசலேம் ஆலயம்...