எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக
திருப்பாடல் 147: 12 – 13, 15 – 16, 19 – 20 ”எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக” எருசலேம் என்று சொல்லப்படுகிற வார்த்தை, இஸ்ரயேல் மக்களைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. எருசலேமில் அமைந்துள்ள ஆலயம் தான், கடவுள் வாழும் இல்லமாகக் கருதப்பட்டது. எருசலேமை யாரும் அழித்துவிட முடியாது என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. எருசலேம் படைகளின் ஆண்டவர் வாழும் கூடாரமாக அமைந்திருந்தது. அதுதான் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. எருசலேம் நகரம் வழிபாட்டின் மையமாகவும் விளங்கியது. இப்படி பல சிறப்புக்கள் வாய்ந்த எருசலேம் நகரம், ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது, இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்ற வேண்டும் என்பதுதான் இதனுடைய மையப்பொருளாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கு என்ன இருக்கிறது? எதற்காக அவர்கள் கடவுளைப் போற்ற வேண்டும்? கடவுள் இஸ்ரயேல் மக்களை முழுமையாக அன்பு செய்கிறார். மற்ற இனத்தவரை விட,...