ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்
திருப்பாடல் 30: 1, 3, 4 – 5, 10 – 11, 12 ”ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” கடவுள் நல்லவர். கடவுள் பொறுமையுள்ளவர். கடவுள் மன்னிப்பு வழங்குகிறவர். இப்படி பல நல்ல பண்புகளை கடவுளுக்கு நாம் கொடுக்கிறபோது, கடவுளால் எப்படி தீமை செய்கிறவர்களைத் தண்டிக்க முடியும்? கடவுள் ஏன் தண்டிக்கிறார்? இது போன்ற கேள்விகள் கடவுளின் பண்புகளைக் கேள்விக்குள்ளாக்கும். கடவுளின் அன்பையும், கருணையையும் முழுமையாக உணர்ந்த, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர் அதற்கான பதிலைத்தருகிறார். கடவுள் கோபப்படக்கூடியவர் தான். எப்போது நாம் தவறு செய்கிறோமோ, எப்போது இந்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கி, இந்த வாழ்வியல் நெறிகளை, இயற்கையின் இயல்புகளைச் சிதைக்கிறோமோ, அப்போது, பொங்கி எழக்கூடியவர். வலியவன் எளியவனை அடக்கி ஆள நினைக்கிறபோது, அவர்களை அடிமைப்படுத்த நினைக்கிறபோது, அதனை தட்டிக்கேட்கிறவர் தான். ஆனாலும், கடவுளின் கோபம் நம்மை அழிக்க நினைப்பது அல்ல, கண்டித்து திருத்துவது மட்டுமே. நாம்...