ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது
திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 16 – 17 ”ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது” இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவருமே கண்டிப்பாக இறந்தே ஆக வேண்டும். ஒரு சிலர் இயற்கையாக இறக்கலாம். ஒரு சிலர் விபத்தில் இறக்கலாம். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒரு சிலர் கொலை செய்யப்படலாம். மனிதர்கள் எல்லாருமே ஒருநாள் இறப்பது உறுதி என்றாலும், யாரும் சாவையே நினைத்துக்கொண்டிருப்பதில்லை. ஒருவேளை நாம் உடல் சுகவீனப்பட்டிருந்தால், நாம் சாவை நினைத்துப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலும், நாம் வாழ்க்கையை வாழத்தான் விரும்புவோம். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு சிலருக்கு சாவு எப்போது வரும் என்பது தெரியாமல் இருந்தாலும், தாங்கள் சாவுக்கு அருகில் இருக்கிறோம், சாவு எப்போதும் தழுவலாம் என்பதை அறிந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலைமதிப்புக்குரியவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். யார் இவர்கள்? எதற்காக...