வாங்க வரவேற்போம்!
மாற்கு 13:24-32 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 33ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். 1850 ஆம் அண்டு இத்தாலியில் உள்ள சான்ட் அஞ்சேலோ லொடிகியானோ என்ற இடத்தில் பிறந்தவர்தான் தூய பிரான்சிஸ் சேவியர் காப்ரினி. தொடக்கத்தில் இவர் ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு துறவியாகப் போகவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவருடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இவரை துறவுமடத்திற்குள் எடுக்க மறுத்துவிட்டார்கள். மேலும் ஒருசில துறவுமடங்களுக்குச் சென்றுபோதும் காப்ரினிக்கு அதுதான் நடந்தது. அப்படியிருந்தாலும் அவர் மனந்தரளாமல் ஒவ்வொரு துறவுமடத்திற்காகப் போய்க்கொண்டே இருந்தார். இந்நிலையில்தான் 1874 ஆம் அண்டு, பேரருட்தந்தை சேராட்டி என்பவர், காப்ரினியை கோடோக்னோ என்ற இடத்தில்...