மனநிலையை மாற்றுவோம்
இன்றைய நற்செய்தியில் இரண்டு விதமான மனநிலையைப் பார்க்கிறோம். 1. இயேசுவின் மனநிலை 2. பரிசேயரின் மனநிலை. இயேசுவுக்கு நிச்சயமாக வானிலிருந்து அடையாளம் தோன்றச்செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவர் நினைத்திருந்தால், எதையும் அவரால் செய்திருக்க முடியும். இதே சோதனை, அவர் பாலைவனத்திலே நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபிக்கிறபோதும் ஏற்படுகிறது. அப்போதும் அலகையின் சோதனைக்கு இடங்கொடுத்து அருங்குறிகளைச் செய்யவில்லை. இப்போது பரிசேயர்களும் இயேசுவைச் சோதிக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை நிராகரிக்கிறார். இயேசுவின் வல்லமை தன்னை, தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. மாறாக, இறையரசைக் கட்டி எழுப்புவதற்காக. இறைவனை மாட்சிமைப்படுத்துவதற்காக. எக்காரணத்திற்காகவும், அதனை தனது சுயவிளம்பரத்திற்கு இயேசு பயன்படுத்த விரும்பவில்லை. பரிசேயர்கள் இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலை தெரியாதவர்கள் அல்ல. இயேசுவின் அறிவின் ஆழத்தைக் கண்டு அதிசயிக்காதவர்கள் அல்ல. இயேசு தச்சர் மகன் என்றாலும், அவரிடத்திலே தங்கள் அறிவுத்திறமை செல்லாது, என்பதை உணராதவர்கள் அல்ல. இயேசு செய்த அனைத்துப்புதுமைகளும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும்,...