Tagged: இன்றைய சிந்தனை

பொறுப்புக்களில் பெருமகிழ்ச்சியடைவோம்!

லூக்கா 19:11-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எல்லோருக்கும் கடவுள் பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை பெருமகிழ்வோடு கொண்டாடாடுபவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிப்பர். அந்த பொறுப்பை வோண்டா வெறுப்போடு பார்ப்பவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாமல் சரிந்து போவார்கள். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமகிழ்ச்சியோடு செய்து வாழ்க்கையை கொணடாடுவோம் வாருங்கள் என இனிய வரவேற்பு வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பொறுப்பை வெறுப்போடு பார்க்காமல் மகிழ்வோடு பார்க்க வேண்டுமென்றால் இரண்டு செயல்கள் செய்வது மிகவும் சிறந்தது. 1. சிறப்பாக்குவேன் என்னிடம் கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் சரி நான் அதை மிகவும் சிறப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருத்தல் வேண்டும். நேற்று செய்தததை விட இன்று இன்னும்...

போரிட்டால் தான் இறையாட்சி இயங்கும்

லூக்கா 17:20-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் நடுவே இருக்கிற இறையாட்சியை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு நாம் போரிட வேண்டும். இறைவனை மட்டுமே நினைத்தவாறு போரிட்டு அலகையின் ஆசைகளின் மீது வெற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு விதத்திலே போரிட்டு இறையாட்சியை அமல்படுத்த அவரசமாய் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது. 1. அமைதிப்போர் நம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் தீமைகளை விரட்டுவதற்கு போராட வேண்டும். இந்த போரும் கடினமான போர் தான். இதை தினமும் தியானித்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெளனமாக வெற்றிக்கொள்ள வேண்டும். மெளனமாக தியானித்து நம்மை வெற்றிக்கொள்வதால் இது மெளனப்போர் என அழைக்கப்படுகிறது. 2. அரட்டும் போர் நம் வாழுமிடங்களில் மனிதர்கள்...

இன்றைக்கு இயேசுவைப் போற்றினீர்களா?

லூக்கா 17:11-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! காலையில் முதலில் கண்விழிக்கும் போது நாம் கடவுள் திருமுன்னிலையில் கண்விழிக்க வேண்டும். அப்படி செய்வது அந்த நாளை சக்திமிக்கதாக மாற்றுகிறது. எழுந்ததும் கடவுளே உமக்கு நன்றி என்று சொல்வது மிகச் சிறந்தது. அதன்பிறகு தொடா்ந்து நம் செயல்களில் அவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு செயல்பாடுகளை செய்து அவரைப் போற்ற வேண்டும். அந்த இரண்டு செயல்பாடுகளை இன்றிலிருந்து செய்வது மிகவும் நல்லது. 1. திருப்பாடல்கள் இசைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் நாம் திருப்பாடல்களை இசைத்து ஆண்டவரைப் போற்ற...

என் கடன் பணி செய்து கிடப்பதே

லூக்கா 17:7-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இந்த உலகில் படைக்கப்பட்ட நாம் பல்வேறு விதமான பணிகளைச் செய்ய வேண்டும். பலருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். கடவுள் நம்மை படைத்து பாசத்தோடு பராமரித்து வருவதற்கு அவருக்கு பல விதமான பணிகளைச் செய்ய வேண்டும். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் நம் வாழ்வில் ஏணிகளாக இருந்திருகிறார்கள். இப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் கடன்பட்டிருக்கின்றோம். பல விதமான பணிகளைச் அவர்களுக்காக கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் பிறப்பு முழுமையடைகிறது. பிறருக்கு நாம் பணிகள் செய்யும்போது இரண்டு சிந்தனைகளை நம் சிந்தைனையில் நிறுத்துவது சிறப்பு. 1. கடன் என்னுடன்...

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள்

யோவான் 2:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம். 1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும் போது பாதுகாப்பு...