அவனும் மனிதன்
லூக் 16 : 19 – 31 அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தவரின் பெயரானது குறிப்பிடப்படவில்லை (காண்க – தி.வெ- 20:15) ஆனால் அடுத்த நேரம் உணவுக்கே வழியில்லாதவனின் பெயரானது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரன் நரகத்திற்கும், ஏழை இலாசர் விண்ணகத்திற்கும் சென்றார்கள். இது அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையிலா? அப்படியென்றால் நம்முடன் வாழும் எந்தப் பணக்காரர்களும் விண்ணகத்திற்கு வரமாட்டார்களா? எல்லா ஏழைகளுக்கும் விண்ணகத்தில் இடமுண்டா? இல்லை. மாறாக, இருவரின் செயல்களையும் மனநிலையையும் பொறுத்தே தீர்ப்பிடப்படுகிறார்கள். பணக்காரன் கண்முன்னேயிருக்கும் இலாசரிடம் மிருகத் தன்மையோடு நடக்கிறான். இலாசரோ தன் அருகேயிருந்த மிருகத்திடம் கூட மனிதத் தன்மையோடு நடந்து கொள்கிறான். ஒரு பணக்காரன் – ஓர் ஏழை, இது உவமையிலே! சில பணக்காரர்கள் – பல ஏழைகள் இது நமது வாழ்க்கையிலே! அறுசுவை உண்டி அமர்க்கள கொண்டாட்டங்கள் இது ஒரு பக்கம். ஒருவேளை உண்ண உணவின்றி, ஒண்ட இடமின்றி, உடுத்தி மூட உடையின்றி ஒருவன்...