மற்றவர்களை உயர்ந்தவர்களாக எண்ணுவோம்
அன்பானவர்களே!!! இந்த உலகத்தில் யாரும் அறிவாளியும், கிடையாது. யாரும் முட்டாளும் கிடையாது. அவரவர் தேவைக்கேற்ப கடவுள் ஞானத்தையும்,புத்தியும்,கொடுக் கிறார். யார் அவரிடம் அதிகமாக கேட்கிறார்களோ அவர்கள் யாவரும் பெற்றுக்கொள்வார்கள். இதை
யாக்கோபு 1:5,6 ஆகிய வசனங்களில் காணலாம். ஆனால் நாம் கேட்பதை மிகுந்த நம்பிக்கையோடு கேட்கவேண்டும். இதைதான் நம் தேவன மிகவும் விரும்புகிறார்.
சில சமயத்தில் நம்மைவிட சிறிய வயதில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஒரு நல்ல விஷயம் கிடைக்கும்.வேதத்தில் நாம் 2 அரசர்கள் 5ம் அதிகாரத்தில் 1லிருந்து 13 வரை உள்ள வசனத்தை வாசிப்போமானால் சீரியா மன்னனின் படைத்தளபதி நாமான் போரிட்டு அந்த நாட்டுக்கு பெரும் வெற்றியை வாங்கி கொடுத்தான். ஆனால் அவனோ தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.மன்னனின் நன்மதிப்பை பெற்ற அவன் வலிமை மிக்க வீரனாகவும் இருந்தான்.
அவன் வீட்டில் இஸ்ரவேல் நாட்டை சேர்ந்த ஒரு சிறு பெண் அவன் மனைவிக்கு பணிவிடை செய்து வந்தாள். சிறுபெண் தன் தலைவியிடம் என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றால் அவர் இவர் தொழுநோயை குணப்படுத்துவார்
என்று சொன்னாள்.அப்பொழுது நாமான் அவளை வேலைக்காரி என்றும், சிறுபெண் என்றும் பாராமல் அவள் சொன்னபடி செய்ய தன் மன்னனிடம் கடிதம் வாங்கி கொண்டு இறைவாக்கினர் எலிசாவை சந்தித்து தான் வந்த காரியத்தை கூரிய பொழுது எலிசா அவனிடம் நீ யோர்தான் நதியில் 7 முறை மூழ்கினால் நலம் பெறுவாய் என்று சொன்னார்.இறைவாக்கினர் சொன்ன வார்த்தைக்கு நாமான், எலிசா தன் உள்ளத்தின் நினைவின்படி கூராமல் [ அதாவது தம் கடவுளாகிய
ஆண்டவரின் பெயரை கூவி அழைத்து தொழுநோய் கண்ட இடத்தில் தம் கையை அசைத்து குணப்படுத்துவார் என்று எண்ணியிருந்தான்] யோர்தான் நதியில் முழுக சொல்கிறாரே என்று அக்காரியத்தை அசட்டை செய்தாலும் தம் வேலைக்காரர் சொல்லியதன் நிமித்தம் யோர்தானில் முழ்கி சுகம் பெறுகிறார்.நாமும் சில வேளைகளில் இப்படிதான் சில காரயத்தை அசட்டை செய்து நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை இழந்து போகிறோம்.ஜெபத்தோடும், ஞானத்தோடு ம்
நடந்து கொண்டால் நாம் நம் சுதந்தரத்தை பெற்றுக்கொள்வோம்.
இயேசுகிறிஸ்துவும் சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது என்று சொல்கிறார். மத்தேயு 19 :14 ; [ லூக்கா 22:26 ; 1பேதுரு 5:5 ; மற்றும் மாற்கு 9:35,36 ஆகிய வசனங்கள் நமக்கு மனத்தாழ்மையையும், ஒவ்வொருவரையும் நம்மைவிட உயர்வாக எண்ணும்படி நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் எல்லோரும் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து மற்றவர்களை உயர்வாக எண்ணி வாழ்த்தி, வாழுவோம்.
ஜெபம்.
=======
அன்பும்,இரக்கமும்,நீண்டபொருமை யும்,தயவும்,கிருபையும் உள்ள இறைவா!!! உம்மை போற்றுகிறோம்,புகழ்கிறோம். நீர் ஒருவரே வியத்தகு செயல்களை செய்கிறவர்.மாட்சி பொருந்திய உமது பெயர் என்றென்றும் புகழ் பெறட்டும். தகப்பனே உமது பார்வையில் நாங்கள் எல்லோரும் உமது சிறு பிள்ளைகளே, எங்களையும் சிறு குழந்தைபோல் பாவித்து எங்கள் குற்றம், குறைகளை நீக்கி ஆசீர்வதித்து காத்து வழி நடத்தும்.
என்றென்றும் மகிமை உமக்கே, ஆமென்! அல்லேலூயா!!!.