ஒன்றுபடுவோம்
ஒரு ஊரில் ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளுடன் மிகவும் சந்தோஷமாக சமாதானமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர். அந்த பெற்றோர் 3 பிள்ளைகளிடம் எந்தவித பாரபட்சமும் இன்றி அன்பு செய்து வளர்த்து,பராமரித்து வந்தார்கள்.
பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து தங்கள் பெற்றோரை நேசித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள்.
இப்படியாக வருஷங்கள் பல போயின.பெரியமகன் [முதல்] தன் பெற்றோரின் பாரம்பரியத்தை அப்படியே கடைப்பிடித்து வந்தார். 2 வது மகன் அதிகம் கொஞ்சம் படித்ததால் பெற்றோரின் பாரம்
பரியத்தில் இருந்து சில கூடுதலான செயல்களை கடைப்பிடித்தார். 3 வது மகன் இரண்டு அண்ணன்களை விட இன்னும் சில கூடுதலான செயலில் ஈடுபட்டு தான் செய்வதே, தான் சொல்வதே தான் போகும் பாதையே சரி என்று நினைத்தார்.
ஆனால் பெற்றோருக்கு அவர்கள் 3 பேரும் அவர்களுடைய பிள்ளைகள். அவர்கள் மூன்று பேரையும் ஒரே அளவில் அன்பு செய்தார்கள். அதில் எந்தவித பாரபட்சமும் இல்லை. கடவுளும் இந்த பெற்றோரை போல் தான் இருக்கிறார்.
கடவுளின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று சில பாதைகளை தெரிந்துக்கொண்டு தாங்கள் செய்வதுதான் சரியான செயல் என்று நினைக்கிறார்கள். கடவுளின் பார்வையில் எல்லோரும் சமமே. ஏனெனில் மனிதர் முகத்தை பார்க்கிறார்கள். ஆனால் ஆண்டவரோ அவர்களுடைய இருதயத்தை பார்க்கிறார். ஏற்றத்தாழ்வுகள் என்பதே கடவுளிடம் கிடையாது. அவரவர் செயலுக்கு தகுந்த பரிசை கொடுப்பது, அவருடைய சித்தமும், கிருபையுமே.
அவர் யாரையும் வெறுக்கவும் மாட்டார். அதே சமயத்தில் கட்டாயப்படுத்தவும் மாட்டார். எந்த விதத்தில் அவரை உண்மையாக தொழுது கொண்டாலும் அவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள
காத்திருக்கிறார்.
கடவுள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் நம் இதயம். அதில் குடியிருக்கவே விரும்புகிறார். அவரை இருதயத்தில் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரிடமும் ஆண்டவர் வாழ்ந்து
வருகிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
யாரும், யாரையும் குறை சொல்லாமல் அவரவர் முழு உள்ளத்தோடு இயேசுகிறிஸ்துவை நேசித்து, அன்பு செய்து, அவரிடம் நம்மை அர்ப்பணிப்போம்
சபை பாகுபாடுகள் எதற்கு ?????? ? இந்த உலகத்தில் வந்து பிறந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் கடவுளான அவரே மெய்யான ஒளி . ஒன்று படுவோம்; ஒற்றுமையாக செயல்படுவோம்.