Category: இன்றைய வசனம்

இணைச் சட்டம் 20:6

திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும். ~இணைச் சட்டம் 20:6

புலம்பல் 3:57,58

உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, “அஞ்சாதே” என்றீர்! . என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்! .  ~புலம்பல் 3:57,58

திருத்தூதர் பணிகள் 4: 12

இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.   ~திருத்தூதர் பணிகள் 4: 12

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 55:22

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 55:22