Category: இன்றைய வசனம்

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 29:11

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! ~ திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 29:11

திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 5:1

முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. ~ திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 5:1

மாற்கு நற்செய்தி 9: 41

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ~மாற்கு நற்செய்தி 9: 41

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 8:12

நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். ~கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 8:12

லூக்கா நற்செய்தி 6:37

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். ~லூக்கா நற்செய்தி 6:37