ஆசீர்வாதம்
கடவுளின் ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும் பிரியமானவர்களே! நோயினாலும்,துன்பத்தினாலும்,கடன்பிரச்சனையினாலும், கஷ்டப்படுகிறீர்களா? மனம் கலங்காதிருங்கள்.அன்பே உருவான நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இன்று உங்களை எல்லாத் துன்பங்களிலும் இருந்து விடுவித்து காப்பார். ஆபிரகாமை ஆசீர்வதித்த கடவுள் உங்களையும் ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். ஆனால் அந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒவ்வொரு வரும் ஆபிரகாமைப்போல் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவரையே பற்றிக்கொள்ளுங்கள். தொடக்கநூல் (ஆதியாகமம்) 15: 6 . அப்பொழுது எல்லாத் துன்பங்களிலும் இருந்து காக்கப்படுவீர்கள். இயேசு உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெறுவீர்கள். யோவான் 8 :36. ஒவ்வொருநாளும் நாளும் நாம் அவர் சொற்களை கண்டடைந்து அவற்றை உட்கொள்ள வேண்டும். ஆண்டவரின் சொற்கள் நமக்கு மகிழ்ச்சியை,தந்து உள்ளத்திற்கு உவகை அளிக்கும். எரேமியா 15 : 16 ஜெபம். ====== எல்லாம் வல்ல இறைவா! எங்கள் உள்ளங்களையும்,எங்கள் ஏக்கங்களையும்,ஆராய்ந்து அறிந்திருப்பவரே! உமக்கேற்ற பாதையில் எங்களை நடத்தி,துன்பங்களிலிருந்து விடுவித்து காத்துக்கொள்ள வேண்டுமாய் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வேண்டிக்கொள்கிறோம்.ஆமென்