பக்தி வைராக்கியம் காத்திடுவோம்
கடவுளின் இறைமக்களே! பிரியமானவர்களே!! நம்முடைய பக்தி ஆதாயம் தருவதுதான். அது யாருக்கென்றால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்தில் நாம் எதையும் கொண்டுவந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. இதை யாவரும் அறிந்ததே. உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால் அவற்றில் மனநிறைவு கொள்வோம். அதிகமான செல்வம் சேர்ப்பதற்காய் பலர் பக்தியை விட்டு பின்வாங்கி தகாத காரியங்களில் ஈடுபடுவதை காண்கிறோம்.கடவுளின் பிள்ளைகளாகிய நாம் பொருள் ஆசையை விட்டு விடுவோம். ஏனெனில் பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் காரணமாகவும், ஆணிவேராகவும் இருக்கிறது. இதைத்தான் நாம் 1 திமொத்தேயு 6: 6,7,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அன்பார்ந்தவர்களே நாம் வீணான ஆசையில் இருந்து தப்பி நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடுவோம். விசுவாச வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்க்கொண்டு கடவுளின் பேரில் இன்னும் அதிகமான நம்பிக்கைவைத்து நிலையான வாழ்வை பற்றிக்கொள்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். இனி வாழ்வது நாம் அல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழட்டும். அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வாழுவோம்....