Category: இன்றைய வசனம்

நம் பொக்கிஷம் எது ?

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! உங்கள் யாவருக்கும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே  கிடைக்கும். மத்தேயு 6 :33. ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில்...

பழிவாங்கும் எண்ணம் நமக்கு வேண்டாமே!

அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளே!உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் கிறிஸ்துஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் நம் தேவைகளை சந்திக்க அநேக காரியங்களில் ஈடுபடுகிறோம். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது உண்மைதான்.  ஆனால் பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொல்வார்கள்.நம் இதயத்தில் தோன்றும் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை எந்த பணத்தாலும் வாங்க முடியாது. அதை கடவுளால் மட்டுமே கொடுக்கமுடியும். நாம் நல்ல நண்பர்களாய் அல்லது நல்ல உறவினர்களாய் இருப்போம். ஆனால் பணம் என்கிற பிசாசு நம் உள்ளத்தில் வந்துவிட்டால் நண்பர்களும், உறவினர்களும் நமக்கு எதிரியாக மாறிவிடுவார்கள். அங்கே போட்டியும், பொறாமையும் தலைவிரித்து ஆடும். அப்பொழுது நம்மை அறியாமல் அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும், பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தை பிசாசு நம் உள்ளத்தில் விதைப்பான்.  கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் பிசாசுக்கு அடிமையாகிவிடுவோம். நம் சந்தோஷம் சமானாதம் எல்லாவற்றையும் இழந்து தவிப்போம். நம்முடைய அனைத்து காரியங்களையும் நம் ஆண்டவர் அறிந்திருக்கிறார்....

சொன்ன சொல் மாறாது நடப்போம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் பேசுவதற்கு முன் நிறைய தடவை யோசித்து பேசவேண்டும். நம் விருப்பப்படி எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை நினைத்து நாம் மனம் கலங்குகிறோம். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்புநாளில் கணக்கு கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள், உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளியாகவும் கருதப்படுவீர்கள் என்று மத்தேயு  12:36,37ல்  வாசிக்கிறோம். நம் சொல்லில் நாம் சிக்கிக் கொள்ளாத படிக்கு சில வேளைகளில் அமைதியாக இருந்து பொறுமையை கடைப்பிடித்தால் அதனால் நாம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். நீதிமொழிகள் 6:2. நம்முடைய சொல் எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். பொல்லாங்கான பேச்சு அருவருப்பு. நம் சொற்கள் ஆழ்கடல் போன்றவை. அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம். ஞானம் சுரக்கும் ஊற்று.  நீதிமொழிகள் 8:7; 18:4.& 16:24. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தரும். ஆதலால் பிரியமானவர்களே நம்மால் கூடுமட்டும் உண்மையை சொல்லி...

அருளினால் [கிருபையால்] நிலைநிற்கிறோம்

கடவுளின் அருளினால் நிலைநிற்க அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வாழும் நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் கிருபையால் வாழ்கிறோம். அவருடைய நிறைவில் இருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். யோவான் 1:16. வானதூதர் மரியாளுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், என்று வாழ்த்தினார். லூக்கா 1:28. இந்த அருளைப்பெற நாமும் அன்னை மரியாளைப் போல ஆண்டவரின் அடிமையாக ஆகவேண்டும். அப்பொழுது நமக்கும் அவருடைய கண்களில் அருள் கிடைக்கும். கடவுள் நம்முடைய தகுதி, படிப்பு, செல்வாக்கு இவற்றை பார்த்து கிருபை அளிப்பதில்லை. நம் உள்ளத்தையும்,எண்ணத்தையும் பார்த்தே நமக்கு கிருபை அளிக்கிறார். அவர் நிறைவேற்றிய மீட்பு செயலின்மூலமும்,அவருடைய அருளாலும் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்களாய் ஆக்கப்படுகிறோம். ரோமர் 3 :24. இலவசமாய் கிடைத்தது தானே என்று நாம் அலட்சியம் செய்யாமல் அவருக்கு பயந்து அவரின் வாக்குகளை காத்து நடப்போம். ஆதாம் செய்த பாவத்தினால் தண்டனை வந்தது.ஆனால் நம் எல்லோருடைய பாவத்துக்கும் கிடைத்ததோ அருள்...

மனதுருகும் நம் ஆண்டவர்

பிரியமான ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின்  நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு திரண்டிருந்த மக்களை பார்த்து அவர்கள்மேல்  மனதுருகி அநேகரை நோயிலிருந்து விடுதலையாக்கினார். மத்தேயு 14:14. என்று வாசிக்கிறோம். இன்றும் நீங்கள் யாராவது நோயினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கீர்களா? கவலைப்பட வேண்டாம். இதோ உங்கள் மேல் மனதுருகும் நம் ஆண்டவர் எல்லா நோயிலிருந்தும் விடுவித்து காக்க வல்லவராய் இருக்கிறார். உங்கள்மேல் அன்பும், பரிவும் காட்ட யாரும் இல்லையே என்று தவிக்கிறீர்களா? மனம் கலங்காதீர்கள். உங்களை நேசிக்க அன்பும் பரிவும், காட்ட நம் ஆண்டவர் உங்கள் அருகில் நிற்கிறார். அவரை நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடு அழைத்தால் உங்களுக்கு உதவ ஆவலோடு காத்திருக்கிறார், அழாதீர்கள் என்று கூறுகிறார். லூக்கா 7:13 . அதுமட்டுமல்ல உங்களுக்கு கருணை காட்டவும், உங்களுக்கு  இரங்குமாறு எழுந்தருள்வார். ஏனெனில் அவர் நீதியின் கடவுள். அவருக்கு காத்திருப்போர் நற்பேறு பெறலாம். எசாயா 30:18 . மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது: என்...