Category: இன்றைய வசனம்

கண்ணின் மணியென நம்மை காத்தருளினார்.இ.சட்டம் 32:10

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் நம் ஆண்டவராகிய இயேசு நம்மை வழிநடத்தும் விதம் ஆச்சரியமானது, அதிசயமானது. நமது ஆண்டவர் வானங்களுடன் பேசும்பொழுது அவை செவிகொடுக்குமாம். பூமியானது அவரின் சொல்லை உற்றுநோக்குமாம். பெருமழை பயிர்கள் மேல் பொழிவது போலவும், தென்றல் பசும்புல் மீது வீசுவதுபோலவும், நம் ஆண்டவரின் அறிவுரை மழையெனவும், அவரின் சொற்கள் பனியெனவும் இறங்கும். உயிரற்ற அவைகளுடன் பேசும் ஆண்டவர் நம்மோடும் பேசி நம் தேவைகளை சந்தித்து, நம்மை அவரின் கண்ணின் மணியைப்போல் காப்பார் என்பதில் சந்தேகம் உண்டோ! இதோ!அவருடைய மக்களை அவரின் வல்லமையால் நிரப்பி, தமது மக்களோடு உடன்படிக்கை செய்து அவரின் திருச்சட்டத்தை நம் இதயத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவரின் இதயத்தின் திட்டங்களை நம்மில் வைத்து செயலாக்கி நிறைவேற்றுவார். தியத்தீரா நகரைச் சேர்ந்த பெண் லீதியா பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளும்படி ஆண்டவர் அவள் உள்ளத்தை திறந்ததுபோல் இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயமும் திறக்கப்பட்டு ஆண்டவரை முழுதும் நம்பி, அவரையே பிடித்துக்கொண்டால் அவர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார். தி.ப.16:14. ஆண்டவர் நம்மை அழைத்த...

திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறியிலே நடப்போம்

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்கிறார். நாம் மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்கு பணியாமல் அநீதிக்கு பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும், சீற்றமும் வந்து விழும். தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். நன்மை செய்யும் அனைவருக்கும் பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.ஏ னெனில் கடவுள் ஆள் பார்த்து செயல்படுகிறவர் அல்ல. திருசட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்: திருசட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர். ஏனெனில் திருச்சட்டத்தை கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை: அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். திருச்சட்டத்தை பெற்றிராத பிறஇனத்தார் அதில் உள்ள கட்டளைகளை  இயல்பாகக் கடைப்பிடிக்கும் பொழுது அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும் தங்களுக்கு தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள் திருச்சட்டம் கற்பிக் கும்...

கடவுளிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர். திருப்பாடல்கள் 2:12.

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நமக்கு விடுதலை கொடுக்கும்படிக்கும், நம்மை மீட்டு பாதுக்காக்கும் படிக்கும் நமக்காக தமது ஜீவனை கொடுத்து தமது இரத்தத்தினால் கழுவி தூய்மையாக்கி நமக்கு ஆசீரை வழங்கியுள்ளார். இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து,மற்றவர்களுக்கும் சொல்லி அவரின் வருகைக்கு ஆயத்தமாகும்படி செய்வது நம் ஒவ்வொருவரின் மேல் விழுந்த கடமையாக கருதி செயல்படுவோம். ஏனெனில் அவர் சினங்கொள்ளாதபடிக்கும் வழியில் யாரும் அழிந்து போகாதபடிக்கும் அவரது காலடிகளை முத்தமிட வேண்டும் என்றும் இல்லையேல் அவரது சினம் விரைவில் பற்றி எரியும் என்று சங்கீதம் 2:12 ல் வாசிக்கிறோம்.அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றவர்கள். நாமும் அந்த பாக்கியத்தை பெற்று மற்றவர் களும் பெற்றுக்கொள்ள வழிக்காட்டுவோம். போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான். ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன். நீதிமொழிகள் 16:20. அவரை நம்பாமல் அலட்சியமாய் இருப்பவர்களின் மேல் அவரது சினம் பற்றி எரியும். சுருளேடு சுருட்டப்பட்டுள்ளதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறையும். மலைகள், தீவுகள் எல்லாம் நிலைபெயர்ந்து போகும், மண்ணுலகில் அரசர்கள் உயர்குடிமக்கள், ஆயிரத்தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள்,...

நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே!

கிறிஸ்து இயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறார். நான்உனக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்துவேன். செப்புக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை தகர்ப்பேன். இருளில் மறைத்து வைத்த கருவூலங்களையும், மறைவிடங்களில் ஒளித்து வைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன் பெயர் சொல்லி உன்னை அழைத்த கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.என்று நமக்கு வாக்கு அருளுகிறார். ஏசாயா 45 :2,3. நாம் அவரை அறியாமல் இருந்தும் நமக்கு பெயரும், புகழும் வழங்கி நமக்கு வலிமை அளிக்கிறார். நாம் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரை தேடுவோமானால் அவர் நம்மேல் இரங்கி தமது ஆற்றலால் நம்மை நிரப்பி, நலிந்த மற்றவர்களை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நமக்கு தந்து கற்றோனின் நாவை அளித்து, காலைதோறும் நம்மை தட்டி எழுப்பி கற்போர் கேட்பதுபோல் நாம் செவிகொடுத்து கேட்கும்படி செய்கிறார். அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நாம் நடந்தோமானால்...

நம்முடைய மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் நம் ஆண்டவர்

அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம் தேவைகளை நினைத்து மனம் கலங்கி நிற்கலாம். இக்காரியம் என்ன ஆகுமோ? எப்படி முடியுமோ? என்று திகைத்து இருக்கலாம். தேவையில் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் நம் கர்த்தராகிய ஆண்டவர் நோக்கி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நம் கடவுளாகிய ஆண்டவர் நம் ஏக்கங்களை அறிந்து நமது வாழ்க்கையில் ஆசீரை தருவதாக வாக்களிக்கிறார். அவர் நமக்கு அளிக்கும் அனைத்து கட்டளைக்கும் நாம் கீழ்படிந்து நடந்தோமானால் நம்மை அவர் அவருடைய கண்ணின் மணியைப் போல் காப்பார். பிரியமானவர்களே! நம்முடைய முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும் அவரை நேசித்து, அவருடைய குரலுக்கு செவிகொடுத்தால் நம்மேல் இரக்கங்கொண்டு நம் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். நாம் வானத்தின் கடை எல்லைவரை துரத்தப் பட்டிருந்தாலும் அங்கு இருந்து நம்மை அழைத்து வந்து நாம் விரும்பும் இடத்தில் சேர்ப்பார். நன்மைகள் யாவையும் தந்து பெருகச் செய்வார். நம்முடைய உள்ளத்தையும், நம் வழிமரபின் உள்ளத்தையும், பன்படுத்துவார். நாமும் வாழ்வு பெற்று அவருக்கு நன்றியுள்ளவர்களாய் மாறுவோம். இன்றும்...