இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22
கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டுள்ளது. கூடாரத்தின் மீதும் வழிப்பாட்டுக்கலன்கள் அனைத்தின் மீதும் அவர் இரத்தத்தை தெளித்தார். உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை என்று எபிரெயர் 9:21,22 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாக நமக்காக ஒப்புக்கொடுத்தார். நம்மை மீட்கும் பொருட்டே அவ்வாறு செய்தார். ஏனெனில் ஒரே மனிதனால் இந்த உலகில் பாவம் வந்ததுப்போல் அந்த பாவத்தை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். ஒரேமுறை நாமும் சாவுக்கு உட்படுகின்றோம். பின்னர் இறுதி தீர்ப்பு வருகிறது. இதுவே நமக்காக நியமித்த நியதி. ஆண்டவராகிய கிறிஸ்துவும் நம் எல்லோருடைய பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மையே பலியாகக் கொடுத்தார். ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். பாவத்தின் பொருட்டு அல்ல....