Category: இன்றைய வசனம்

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். மத்தேயு 6:34

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.ஏசாயா 30:21

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.நீதிமொழிகள் 23:18

பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்;யாத்திராகமம் 34:10

“இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”வெளி 21:5