இன்றைய சிந்தனை இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் பல ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்கள் தேவைகள் யாவையும் நிறைவேற்றி வந்தார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை. தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறையும்,கரிசனையும், உடையவராய் இருந்தார். பேய்களை ஓட்டினார் அநேகரை சுகப்படுத்தினார். இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்.அவர் தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியது போல நாமும் கிறிஸ்துவின் திருவுளத்தை நிறைவேற்ற கடமை பட்டவர்களாய் அவரின் மனவிருப்பத்தை அறிந்து அதன்படியே செயல்பட்டு நாமும் நன்மை செய்வதில் மனந்தளராமல் இருப்போமானால் ஏற்ற காலத்தில் அதின் பயனை பெற்றுக்கொள்வோம். 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் ஒரு போதகர் ஒரு கிராமத்தில் இயேசுகிறிஸ்துவை பற்றி ஆலயத்தில் யாருக்கும் தெரியாமல் ஆலயத்தின் கதவுகளை எல்லாம் அடைத்துக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு பிரசங்கம் செய்தாராம். ஏனென்றால் அந்த ஊர் அரசாங்கம் அப்பொழுது கெடுபிடியான சட்டத்தை கையாண்டது. இயேசுகிறிஸ்துவைப் பற்றி யாரும் பிரசங்கம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அவர்கள் மேல் கொலைப்பழி சுமத்தி கடுமையான தண்டனை கொடுப்பார்களாம்...
Like this:
Like Loading...