நாம் வேண்டுவதற்கு முன்னே மறுமொழி தரவும்,நாம் பேசி முடிப்பதற்கு முன்னே பதில் அளிக்கவும் கடவுள் எப்பொழுதும் நம்முடைய நினைவாக நிழலாக இருக்கிறார்.நம்மை ஒரு திராட்சை தோட்டமாக உருவாக்கி நல்ல பழங்களை நாம் கொடுக்கும்படி அவர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.நற்கனிகளை கொடுக்கிறோமா?என்று ஒவ்வொருவரும் இந்த நாளில் சிந்தித்து செயல்பட வேண்டுமாக விரும்புகிறார்.ஏனெனில் மலைகளை உருவாக்கியவர் அவரே; தோற்றுவிப்பவர் அவரே; எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுதுபவரும் அவரே;காலைப்பொழுதை காரிருள் ஆகச் செய்பவரும் அவரே;இப்பேற்பட்ட ஆண்டவருக்கு நாம் நல்ல பழங்களை கொடுக்கிறோமா? ஒருநாள் இயேசு காலையில் நகரத்திற்கு திரும்பி வந்தபொழுது அவருக்கு பசி உண்டாயிற்று.வழியோரத்தில் ஒரு அத்தி மரத்தை பார்த்து அதன் அருகில் சென்று அதில் ஏதாவது கனி இருக்கும்,பறித்து சாப்பிடடலாம் என்று நினைத்தார்.ஆனால் அந்த மரத்தில் ஒன்றும் இல்லாததால் அந்த மரத்தைப் பார்த்து இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய் என்று சொன்னார்.உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று.சீடர்கள் யாவரும் ஆச்சரியப்பட்டு இந்த மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?என்று...
Like this:
Like Loading...