Category: இன்றைய வாக்குத்தத்தம்
லூக்கா 10:38-42 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பலவற்றை தேடி அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுவதற்குள் பலவற்றை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக, படபடப்பாக அலைகிறோம். இப்படி அலைந்ததனால் அடைந்த இலாபம் என்ன? பெருநஷ்டம் தான் மிஞ்சியது. பெரும்கவலை தான் கிடைத்தது. வாழ்க்கையில் இலாபம் கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றே போதும் என்கிறார் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பொறுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் இலாபம் பொங்கி பொங்கி வரும். கலங்க வேண்டியதில்லை. இந்த பொறுமை நமக்கு பல நேரங்களில் இருப்பதில்லை. பொறுமையே நம் வாழ்விற்கு பெருமையைக் கொண்டு வருகிறது. பொறுமையை இரண்டு...
Like this:
Like Loading...
ஓய்வுநாள் என்பது எபிரேய மொழியின் “ஷாவத்” என்கிற வார்த்தையின் பொருளை மையப்படுத்தியதாகும். அதன் பொருள் “இளைப்பாறுதல்”, ”தவிர்த்தல்”, ”ஓய்வெடுத்தல்” என்பதாகும். யூதர்களின் ஓய்வுநாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய மறைவு வரை இருக்கும். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள். ஏனென்றால், அன்றைய தினம் நம் ஆண்டவரின் உயிப்புநாள். இந்த ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை என்று, யூதர்களின் மறைநூல் அறிஞர்கள் பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தனர். இந்த ஒழுங்குகளில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் வரும் ஓய்வுநாளில் கதிர்கொய்தல் பற்றியது ஆகும். அடுத்தவருக்கு சொந்தமான வயலில் கதிர்களைப்பறிப்பது தவறானது அல்ல. அது ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது. அரிவாளால் பறிக்காதவரைக் குற்றமில்லை. எனவே, சீடர்களின் இந்த செயல் நியாயமானதாக, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் கதிர்களைப்பறித்தது ஓய்வுநாளில். அதுதான் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது. இதைத்தான் பரிசேயர் குற்றப்படுத்துகின்றனர். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். இருந்தும் அவர்கள் அதைப்பறிக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம், தாங்கமுடியாத பசி. பொறுத்து, பொறுத்துப்...
Like this:
Like Loading...
மத்தேயு 11:20-24 பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது. நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற...
Like this:
Like Loading...
உணர்வுகளின் வெளிப்பாடு தான் அன்பு. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனையும் முழுமையாக அன்பு செய்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஏழைகள், அடிமைகள், நோயாளிகள் என்று, இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்த விளிம்புநிலை மக்களை, அவராகவே சென்று சந்தித்து, அவர்களும் கடவுளின் பிள்ளைகள் அவர்களுக்கும் எல்லா உரிமைகளும், கடவுளின் அன்பும் இருக்கிறது என்பதை, நிறைவோடு வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. இன்றைய நற்செய்தியிலும் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11), கடவுளின் அன்பு இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதை வாழ்ந்து காட்டுகிறார். குறைபாடுகள் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகம் இழிவாகத்தான் பேசும். அவர்களை ஒதுக்கித்தான் வைக்கும். அவர்களிடத்தில் பேசுகிறவர்களையும் இழிவாக நடத்தும். இதனாலேயே பலபேர் அப்படிச்செய்வது தவறு என்று தெரிந்தும், நமக்கேன் தேவையில்லாத வம்பு? என்று, இந்த உலகத்தோடு வாழப்பழகி விடுகிறார்கள். ஆனால், இயேசு அந்த எல்லையை மீறிச்செல்கிறார். அந்த...
Like this:
Like Loading...
துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து, ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வாழ்வை வெறுப்பதும், வாழ்வைப்பற்றிய சரியான பார்வை அல்ல. இன்பமோ, துன்பமோ வாழ்வில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த சிந்தனை தான், இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குத்தரப்படுகிறது. வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம். எப்போதும் ஒரே போல இருக்காது. யோவான் சிறையில் இருக்கிறார். அவரின் சீடர்களுக்கு இப்போது துன்பமான நேரம். ஆனால், இந்த துன்பமும் நிரந்தரமல்ல. காலம் மாறும். இந்த துன்பமும் நீங்கும். அதேபோல இயேசுவின் சீடர்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். காரணம், இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்கள் துன்பத்தை சந்திக்கும் காலம் வரும். துன்பம் வரும் என்பதற்காக, இப்போதுள்ள இன்பமான நேரத்தை கவலையில் மூழ்கடிக்கக்கூடாது. மகிழ்ச்சியான நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துன்பம் என்பது நமக்கு வாழ்வில் பல பாடங்களைக் கற்றுத்தரக்கூடியது. துன்பத்தை...
Like this:
Like Loading...