Category: இன்றைய சிந்தனை

கடவுள் எங்கோ இல்லை

யோவான் 10.31-42 பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள். இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள்....

ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்

திருப்பாடல் 105: 4 – 5, 6 – 7, 8 – 9 திருப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் கடவுளைப் போற்றுவதற்கும், புகழ்வதற்குமானது. இந்த புகழ்ச்சிப்பாடல்களில் ஒரு சில பாடல்கள் மிகச்சிறியதாகவும், ஒரு சில பாடல்கள் மிக நீண்டதாகவும் காணப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்றால், கடவுளைப் புகழ்வதற்கு நீண்ட பாடல்கள் தேவையில்லை. மாறாக, நல்ல தூய்மையான மனநிலை தான் அவசியம். எவ்வளவு நீளமாக நாம் பாடுகிறோம், வாழ்த்துகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த மனநிலையோடு நாம் கடவுளைப் போற்றுகிறோம், புகழ்கிறோம் என்பதுதான், இங்கே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக இருக்கிறது. கடவுளையும், அவரது ஆற்றலையும் தேட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதற்காக கடவுளையும், அவரது ஆற்றலையும் நாம் தேட வேண்டும்? இந்த உலகம் வாழ்வதற்கு கடினமானது. இங்கே நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் விழித்தெழுகிறபோது, பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்று தான், நாம்...

என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்

தானியேல்(இ) 1: 29, 30 – 31, 32 – 33 தானியேல் இணைப்புப் புத்தகத்தில் மூன்று இளைஞர்களைப் பற்றிய நிகழ்வை முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்த மூன்று இளைஞர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ. இவர்கள் உண்மையான தெய்வமாகிய “யாவே“ இறைவனை வணங்கிக்கொண்டிருக்கிறவர்கள். வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்த, அரசரால் வற்புறுத்தப்படுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்கள், கடவுளின் மாட்சியையும், மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைத்தான் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. கடவுள் இன்றோ, நேற்றோ கண்டுபிடித்து வழிபடக்கூடியவர் அல்ல. மாறாக, பல தலைமுறைகளாக வழிபட்டு வரக்கூடிய கடவுள். இந்த கடவுள் அவர்களின் மூதாதையரின் கடவுள். அவர்களை பல தலைமுறைகளாக வழிநடத்தி வந்த கடவுள். இன்றைக்கு இஸ்ரயேல் மக்களின் உயர்வுக்கு அவர் தான் காரணமானவராக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் பெற, இஸ்ரயேல் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், கடவுள் அந்த தகுதியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். கடவுள் உண்மையாகவே போற்றுதற்குரியவர். இந்த பாடல்...

தாழ்த்தினால் உணர்வாய்

யோவான் 8: 21-30 கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார். கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின்...

நான் எதற்கும் அஞ்சிடேன்

திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6 அச்சம் என்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்று. வாழ்க்கையில் எது நடக்குமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருக்கும். அடுத்த வேளை என்ன நடக்குமோ என்கிற பதட்டம் மனிதர்களுக்குள்ளாக நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் பயப்படாமல் இருக்கிற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே, அடுத்த வேளையைப் பற்றியோ, அடுத்த நாளைப்பற்றியோ கவலை கொள்ளாத மனிதர்கள். ஆகவே, நாம் அனைவருமே கடவுள் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைத்து, நமது வாழ்வை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். எது சரி? எது தவறு? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இயேசுவை எப்படி சிக்க வைக்கலாம்? என்பதற்காக. இது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சனை சற்று...