சொன்ன சொல் மாறாது நடப்போம்
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் பேசுவதற்கு முன் நிறைய தடவை யோசித்து பேசவேண்டும். நம் விருப்பப்படி எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை நினைத்து நாம் மனம் கலங்குகிறோம். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்புநாளில் கணக்கு கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள், உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளியாகவும் கருதப்படுவீர்கள் என்று மத்தேயு 12:36,37ல் வாசிக்கிறோம். நம் சொல்லில் நாம் சிக்கிக் கொள்ளாத படிக்கு சில வேளைகளில் அமைதியாக இருந்து பொறுமையை கடைப்பிடித்தால் அதனால் நாம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். நீதிமொழிகள் 6:2. நம்முடைய சொல் எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். பொல்லாங்கான பேச்சு அருவருப்பு. நம் சொற்கள் ஆழ்கடல் போன்றவை. அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம். ஞானம் சுரக்கும் ஊற்று. நீதிமொழிகள் 8:7; 18:4.& 16:24. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தரும். ஆதலால் பிரியமானவர்களே நம்மால் கூடுமட்டும் உண்மையை சொல்லி...