நம் உடன்பிறந்தார் தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம். மத்தேயு 18:35
அன்பும், பாசமும் நிறைந்த என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் நமக்கு அவரின் அன்பின் மேன்மையை உணர்த்தி நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு சொல்லி வைத்திருக்கிறார். நாமும் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போமானால் நிச்சயம் இந்த உலகில் ஒரு வெற்றி உள்ள வாழ்வை வாழ்ந்து அவர் மகத்துவத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தவக்காலத்திலும் நாம் தினந்தோறும் ஆலயம் செல்லலாம், திருப்பலியில் பங்கு பெறலாம். நம்முடைய மனசாட்சியை சோதித்து பார்ப்போம். அவற்றை ஒழுங்காக கடைப்பிடிக்கும் நாம் நம் சகோதர, சகோதரிகளிடம், நம் பெற்றோர்களிடம், நம் பிள்ளைகளிடம், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், நம் நண்பர்களிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? கடவுளின் விருப்பப்படி செயல்படுகிறோமோ? அல்லது வெளியில் அவர்களோடு பேசி நம் உள்ளத்தில் அவர்களை வெறுக்கிறோமா? என்று நம்மை நாம் ஆராய்ந்துப் பார்ப்போம். நம் மனசாட்சி நாம் செய்யும் காரியத்தை குற்றம் உண்டு, குற்றம் இல்லை என்று நமக்கு தீர்ப்பு வழங்கும்....