பாவிகளையே அழைக்க வந்தவர் நம் இயேசு. மாற்கு 2:17.
அன்பும்,பாசமும்,நிறைந்த இணையதள நெஞ்சங்களுக்கு,நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் ஒருவரிலாவது பாவமே செய்யாத மனுஷர் கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக பாவம் செய்கிறோம். அதனால் தான் கடவுள் மனுவுறுக்கொண்டு இந்த பூமியில் இறங்கி வந்தார். பூமிக்கு வந்தது மட்டுமல்லாமல் தமது உயிரையே கொடுத்தார். அதுவும் நாம் நேர்மையாளர் என்ற காரணத்துக்காக அல்ல. ஒருவேளை ஒரு நேர்மையாளருக்காக ஒருவர் தனது உயிரை கொடுக்கலாம். அதுவே அரிதான செயலாக இருக்கும் பொழுது நாம் பாவிகளாய் இருந்தபொழுது கிறிஸ்து நமக்காக தமது உயிரைக்கொடுத்தார். உயிரையே கொடுத்து தமது அன்பை வெளிப்படுத்தி நம்மை மீட்டுக்கொண்டார். ரோமர் 5:8. மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என இயேசுவே லூக்கா 15:10ல் கூறுகிறார். ஏனெனில் அவர் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறவர். அதனால்தான் அவர் நேர்மையாளரை அழைக்க வராமல் பாவிகளையே அழைக்க வந்தார். மத்தேயு 9:13. நோயுற்ற ஒருவருக்கு ஒரு குணமாக்கும் மருத்துவர் எவ்வளவு அவசியமோ,...