Category: இன்றைய சிந்தனை

நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே!

கிறிஸ்து இயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறார். நான்உனக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்துவேன். செப்புக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை தகர்ப்பேன். இருளில் மறைத்து வைத்த கருவூலங்களையும், மறைவிடங்களில் ஒளித்து வைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன் பெயர் சொல்லி உன்னை அழைத்த கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.என்று நமக்கு வாக்கு அருளுகிறார். ஏசாயா 45 :2,3. நாம் அவரை அறியாமல் இருந்தும் நமக்கு பெயரும், புகழும் வழங்கி நமக்கு வலிமை அளிக்கிறார். நாம் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரை தேடுவோமானால் அவர் நம்மேல் இரங்கி தமது ஆற்றலால் நம்மை நிரப்பி, நலிந்த மற்றவர்களை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நமக்கு தந்து கற்றோனின் நாவை அளித்து, காலைதோறும் நம்மை தட்டி எழுப்பி கற்போர் கேட்பதுபோல் நாம் செவிகொடுத்து கேட்கும்படி செய்கிறார். அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நாம் நடந்தோமானால்...

நம்முடைய மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் நம் ஆண்டவர்

அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம் தேவைகளை நினைத்து மனம் கலங்கி நிற்கலாம். இக்காரியம் என்ன ஆகுமோ? எப்படி முடியுமோ? என்று திகைத்து இருக்கலாம். தேவையில் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் நம் கர்த்தராகிய ஆண்டவர் நோக்கி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நம் கடவுளாகிய ஆண்டவர் நம் ஏக்கங்களை அறிந்து நமது வாழ்க்கையில் ஆசீரை தருவதாக வாக்களிக்கிறார். அவர் நமக்கு அளிக்கும் அனைத்து கட்டளைக்கும் நாம் கீழ்படிந்து நடந்தோமானால் நம்மை அவர் அவருடைய கண்ணின் மணியைப் போல் காப்பார். பிரியமானவர்களே! நம்முடைய முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும் அவரை நேசித்து, அவருடைய குரலுக்கு செவிகொடுத்தால் நம்மேல் இரக்கங்கொண்டு நம் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். நாம் வானத்தின் கடை எல்லைவரை துரத்தப் பட்டிருந்தாலும் அங்கு இருந்து நம்மை அழைத்து வந்து நாம் விரும்பும் இடத்தில் சேர்ப்பார். நன்மைகள் யாவையும் தந்து பெருகச் செய்வார். நம்முடைய உள்ளத்தையும், நம் வழிமரபின் உள்ளத்தையும், பன்படுத்துவார். நாமும் வாழ்வு பெற்று அவருக்கு நன்றியுள்ளவர்களாய் மாறுவோம். இன்றும்...

நம் பகைவர் கையின்றும் ஆண்டவர் நம்மை மீட்டருள்வார். மீக்கா 4:10

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும்,நாம் ஆண்டவரின் சொல்கேட்டு நடந்தால், அவர் சொல்கிறபடி யாவற்றையும், செய்தால் நம்மை எதிர்ப்பவர்களுக்கு அவரே எதிரியாயும், நம்மை பகைப்பவர்களுக்கு, பகைவனுமாக இருப்பதாக கடவுள் நமக்கு வாக்கு அருளுகிறார். விடுதலை பயணம் 23:22. அவர் குரலுக்கு நாம் செவிக்கொடுத்தால் உலகின் அனைத்து மக்களும் நமக்கு வாழ்த்து சொல்லும்படி செய்கிறார். அதுமட்டுமல்லாமல் விண்மீன்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், நம் வழிமரபை பலுகிப் பெருகச் செய்வார். நம் வழிமரபினர் தங்கள் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கி கொள்ளும்படி செய்வார். தொ.நூல்.22:17. நீங்கள் நல்லது செய்தும் உங்களுக்கு தீமை நடந்தால் கவலைப்படாமல் இருங்கள். நமக்காக யுத்தம் செய்யும் கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் கலங்க தேவையில்லை. அவருடைய தூய ஆவியானவர் நம்மை அவருடைய ஆவியினாலும், வல்லமையாலும்,  நீதியாலும், ஆற்றலாலும், நிரப்பி காத்துக்கொள்வார். நம் பகைவர் மானக்கேடு அடைவார்கள். முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். ஏனெனில் கடவுள் அவர்களிடம் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்வார். அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்துக்கொள்ளவில்லை. கடவுள் நமக்கு...

மகளிர் தின சிறப்புகள்

கடவுளுக்குள் அன்பான சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பெண்ணாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்று நாம் படித்திருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வதையும் படித்திருக்கிறோம். வானத்தையும், பூமியையும் படைத்த கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத,மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். தொடக்க நூல் 2:7. அதுபோல் ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உருவாக்கி அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. தொடக்கநூல் 2:19. ஆனால் பெண்ணை கடவுள் மண்ணினால் உருவாக்கவில்லை. மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல என்று நினைத்து அவனுக்கு ஒரு துணையை ஏற்படுத்த நினைத்து அவனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்து அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்து அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி அந்த மனிதனுக்கு கொடுத்தார் என்று அதே அதிகாரம் 2:21,22ல் வாசிக்கலாம். இதிலிருந்து...

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல் மாறுவோம்.

அன்பும், பாசமும் நிறைந்த அன்பின் நெஞ்சங்களுக்கு நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய இதயங்களை சோதித்து பார்ப்போம். இதயம் என்ற நிலத்தில் விதைக்கப்பட்ட வசனத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? மேலோட்டமாக வாசித்து விட்டுவிடுகிறோமா? அல்லது வாசித்து, தியானித்து அதன்படியே வாழ்ந்து நமது வாழ்க்கையில் உண்மையோடும், தூய்மையொடும் இருந்து அந்த வசனம் முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன்தரும்படி செயல் படுகிறோமா?என்று யோசித்து பார்ப்போம். மத்தேயு 13:8,23 , மாற்கு 4:20 , மற்றும் லூக்கா 8:8. இறைவார்த்தைகளை ஒவ்வொருநாளும் கேட்டு அதை உறுதியாக பற்றிக்கொண்டு சோதனை காலங்களிலும் சோர்ந்து போகாமல் கடவுள்மேல் முழு நம்பிக்கையை வைத்து அவரையே நோக்கி பார்த்து நம் தேவைகளை தந்தருள வேண்டுமாய் அவரின் பாதத்தை பற்றிக்கொள்வோம். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது நாம் எப்படி வாழவேண்டும் என்று பல உவமைகள் மூலம் நமக்கு விளக்கி காட்டியுள்ளார். வழியோரம் விதைக்கப்பட்டவர்கள் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தைகளை கேட்டு புரிந்து கொள்ள மாட்டார்கள். பாறைப்பகுதியில் விதைக்கப்பட்டவர்கள் இறைவார்த்தையை கேட்டவுடன் மகிழ்ச்சியோடு...