மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்துக்கொள்வோம்.
இறைஇயேசுவில் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு தவக்கால வாழ்த்துக்களை சொல்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு அழைத்து வந்த நம் இயேசுவின் குணங்களை நாமும் பெற்று அவரின் திருவுளச் சித்தத்தை நிறைவேற்ற அவர் பாதம் பணிந்திடுவோம். அவர் சிலுவை சுமப்பதற்கு முன் நமக்கு கற்றுக்கொடுத்த அறிவுரைகளை நாமும் அப்படியே கடைப்பிடிப்போம். கடவுளின் மைந்தனாய் வந்த அவரே, அவரின் தந்தைக்கு எவ்வளவாய் கீழ்படிந்து நடந்தார் என்றால் நாம் இன்னும் எவ்வளவு கீழ்படிய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது” என்றார். மத்தேயு 11 :29 , 30. இந்த நாளிலும் நாம் ஆண்டவரைப்போல் நம்மை மாற்றி ஒரே மனத்தவராய் இருக்கவும், உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகவும்,...