Category: இன்றைய சிந்தனை

தூய ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்வோம்.எபேசியர் 4:3.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் தூய ஆவியால் நிரம்பி ஜெபித்து, ஆண்டவரின் சித்தத்தை அறிந்து அதன்படியே செயல்பட்டால் நம் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்றமுடியாது. ஏனெனில் நம்மில் இருக்கும் ஆவியானவர் இருளில் இருந்து காப்பாற்றி நம்மை ஒளியினிடத்தில் அழைத்து செல்பவராய் நமக்குள் வாசம் செய்கிறார். நமக்குள் இருப்பவர் உலகில் இருக்கும் எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். யோவான் 4:4. தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருக்கிறது என்று சொல்லும் யாவரையும் நம்பவேண்டாம். அந்த தூண்டுதல் கடவுளிடம் இருந்து வருகிறதா என்று சோதித்து பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் போலியானவர்கள் உலகெங்கும் தோன்றியுள்ளார்கள். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவினால் உங்களால் நன்கு கண்டுணரமுடியும். அந்த அருள் பொழிவினால் உண்மை எது? பொய் எது? என்று நன்கு கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்து ஒருமைப்பாட்டைக் காத்துக்...

அன்பும்,அமைதியும்,அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவருக்கு பிரியமானவர்களாய் இருக்கிறோமா என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு பிரியமாய் வாழ்ந்தோமானால் அவர் நம்மேல் வைத்த அன்பு இன்னது என்று விளங்கும். அன்பே உருவான கடவுள் நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தார்.நாம் சந்தோசமாக, சமாதானமாக, அமைதியுடன் வாழ வேண்டுமாய் அவர் தம் உயிரையே நமக்காக கொடுத்தார். நம்முடைய அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாமும் அறிந்தோமானால் அதின் மகிமை நமக்கு நன்கு விளங்கும்.இதை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் அன்பை அறிந்துக்கொள்ளும் வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பூரணத்தினாலும நிறையப்படவும், கடவுளின் மகிமையின்படி அவரின் அன்பின் மகத்துவத்தை அறிந்து செயல்பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும். அப்பொழுது நம் தேவன் நமக்கு அன்பையும்,அமைதியும் அளித்து நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிப்பார். அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அதனால் தான் மறைநூல் அன்பு திருச்சட்டத்தின் நிறைவு என்று கூறுகிறது. நாம் ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு...

“நான் உங்களோடு இருக்கிறேன்”என்கிறார் நம் ஆண்டவர். ஆகாய் 1:13

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு  நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இதோ இந்த நாளிலும் நான் நினைத்த காரியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று தவிக்கும் உங்களைப் பார்த்து ஆண்டவர் என் மகனே, என் மகளே நீங்கள் கலங்க வேண்டாம், இதோ உங்களுக்கு நன்மை கிடைக்கும்படி நான் உங்களோடு இருக்கிறேன் என்று வாக்கு அருளுகிறார். நான் உங்கள் மேல் வைத்திருக்கும் நினைவுகள் தீமைக்கானவைகளல்ல. அதை நன்மையாக மாற்றி உங்கள் தேவைகள் யாவையும் ஏற்ற நேரத்தில் செய்து கொடுப்பேன். அதற்காகவே நான் எப்பொழுதும் உங்கள் கூடவெ இருக்கிறேன் என்கிறார். நாம் எல்லோரும் விரும்பும் ஒரு காரியம் நாம் நினைத்ததை உடனே செய்யவேண்டும், அந்த காரியம் உடனே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் கடவுள் எல்லாவற்றிக்கும் ஒரு கால நேரத்தை குறித்து வைத்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறக்க ஒரு காலம், இறக்க ஒரு காலம், நட ஒரு காலம், நட்டதை அறுவடை செய்ய ஒரு காலம்,...

ஆண்டவர் நம் பாதைகளை செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3:6

அன்பும்,பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் அநேக விருப்பங்களும் ஆசைகளும், தேவைகளும் உண்டு. இவைகள் ஒவ்வொன்றும் நமக்கு தேவையானது என்று நம்மை உருவாக்கிய ஆண்டவர் அறிந்து வைத்துள்ளார். ஏனெனில் நாம் அவருடைய உரிமைச் சொத்தும், அவருடைய மந்தையின் ஆடுகளாய் இருக்கிறோம். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் தான் மேய்ப்பான். அவனுக்கு தமது ஆட்டின் பசியை எவ்வாறு போக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவனாயும் இருப்பான். ஒரு மனிதனே இவ்வாறு தமது ஆடுகளை மேய்க்கும் பொழுது நம் ஆண்டவர் நமது ஒவ்வொரு தேவைகளையும் காண்பவர். அதை நமக்கு தருபவர் என்பதில் என்ன சந்தேகம்? நிச்சயம் தருவார். நமக்காக தமது உயிரையே கொடுத்தவர் மீதியானவற்றையும் தர காத்திருக்கிறார். நாம் இருளில் குடியிருந்தாலும் நமக்கு ஒளியை தருபவர் அவரே. நாம் அவருக்கு எதிராக பாவம் செய்யும்பொழுது நம் பாவத்தின் நிமித்தம் நம்மேல் கோபம் கொண்டாலும்,அவருடைய அன்பின் நிமித்தம் தமது கோபத்தை நம்மேல் இருந்து நீக்கி நம்மை மன்னித்து அவருடைய நீதியாலும்,நியாத்தினாலும்,கிருபையாலும்...

கடவுள் நமக்கு இருமடங்கு நன்மைகளை இன்றே தருவார்.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் நம்மை பார்த்து நம் ஆண்டவர், நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக்கைதிகளே,  உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்:இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன், என்று செக்கரியா 9: 12ல் கூறுகிறார். நாம் பல நேரங்களில் பலப்பல பாவங்களை செய்துவிடுகிறோம். நம்முடைய அவசர புத்தியினாலும், கோபத்தினாலும், சுயநலத்தினாலும், தற்புகழ்ச்சியின் காரணத்தினாலும் அவ்வாறு செய்துவிடுகிறோம். ஆனால் அன்பே உருவான நம்முடைய தேவன் நம் பாவங்களை மன்னித்து நம்முடைய குற்றம்  குறைகளை நம்மிடத்தில் இருந்து நீக்கி நமக்காக சிலுவை சுமந்து, அடிக்கப்பட்டு தமது இரத்தத்தை கொண்டு நம்மை சுத்திகரித்த வண்ணமாய் தமது ஜீவனையே கொடுத்து நம்மை மீட்டு என் பிள்ளைகளே இன்றே நீங்கள் அரணுக்குத் திரும்புங்கள் என்று சொல்கிறார். நம்மில் எத்தனை பேர் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவருக்கு பயந்து நடக்கிறோம்,என்று நாம் ஒவ்வொருவரும் நமது இருதயத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். ஏனெனில் நம்முடைய இருதயத்தில் தங்கியிருக்கும் தூய ஆவியானவர் நாம் செய்யும் செயல்களுக்கு...