Category: இன்றைய சிந்தனை

கடவுள் எதை விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.யோபு 23 – 13.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்தையும்,மன விருபபத்தையும் கொடுத்து அதை செய்து முடிக்க அறிவையும், புத்தியையும் கொடுக்கிறார். சில வேளைகளில் நாம் விரும்பும் காரியம் நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம்முடைய உடலும்,உள்ளமும்,சோர்ந்து போய்விடுகிறது. ஆனால் காத்திருந்து கிடைக்கும் எந்த ஒரு காரியத்திலும் பலமடங்கு ஆசீர்வாதம் இருக்கும். ஆனால் நமக்கோ பொறுமை இல்லாமல் மனம் பதறுகிறோம். யோபுவின் சரித்திரத்தை வாசித்து பார்ப்போமானால் நமக்கு நன்கு விளங்கும். ஆண்டவர் அவர்மேல் அன்பு கூரும் யாவரையும் சோதித்து பார்ப்பார். நம்முடைய நம்பிக்கையும்,விசுவாசமும், எந்த அளவு உறுதியாய் இருக்கிறது என்று தமது பிள்ளைகளை சோதித்து பார்க்கிறார். யோபுவும் கூட மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வந்தார். கடவுளே அவரைக் குறித்து அவனைப்போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவன் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்று ஆண்டவரே அவரை குறித்து சாட்சி கொடுக்கிறார். ஆனாலும் ஆண்டவர் அவரை சோதிக்க...

மரித்தேன்,இதோ!சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள். நமக்காகவும் நம்முடைய பாவங்களுக்காகவும், தமது ஒரே மகனை கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பி அன்றிலிருந்து இன்றுவரை நம்மோடு கூடவே இருக்கும்படி கிருபை அளித்து அவருடைய தூய ஆவியை தந்தருளியிருக்கிறார். உயிரோடு எழுந்து நாற்பது நாட்கள் வரைக்கும் தமது சீடர்களுக்கு தோன்றி அவர்களை பலப்படுத்தி பிறகு விண்ணேற்றமடைந்தார். அன்பே உருவான ஆண்டவர் நம்மை தனியாக விடாமல் தமது தூய ஆவியை தந்து அதன் மூலம் நமக்கு ஒவ்வொரு நாளும் போதித்து காத்து வழிநடத்துகிறார். மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடு நம்மோடு இருக்கிறார். அன்பை கட்டுப்படுத்தவோ, அடக்கி வைக்கவோ ஒருவராலும் கூடாது. அவரின் அன்பை கல்லறைக்குள் புதைத்துவிட நினைத்தவர்களே ஏமாற்றமடைந்தனர். அவர் தமது அன்பை நமக்கு கொடுக்க இன்று உயிரோடு நம் மத்தியில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார். வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும், வேறொரு மரியாவும்,கல்லறையை பார்க்க சென்றனர். திடீரென்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின்...

மனுக்குலத்துக்கே அரசனாகிய இயேசுகிறிஸ்து சாரோனின் ரோஜா.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். சுமார் 800 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரசி இவ்வாறு எழுதி வைத்துள்ளார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விருப்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்.வேதனையுற்ற மனிதராய் இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவு படுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.நம் துன்பங்களை சுமந்துக்கொண்டார்.நமக்காக சிறுமை படுத்தப்பட்டார்.அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார்.நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவருடைய காயங்களால் நாம் குணமடைகிறோம்.நாம் ஆடுகளைப்போல் வழி தவறி அலைந்தோம்,ஆனால் கடவுளோ நம் அனைவரின் தீச்செயல்களுக்காக அவரை காயப்படுத்தினார்.அடிப்பதற்கு இழுத்து செல்லும் ஆட்டைப்போலவும்,ரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போல் தமது வாயை திறவாமல் நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,அக்கிரமங்கள்,யாவையும் சுமந்தார். சாரோனின் ரோஜாவாய்,பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமுமாயிருந்த அவர்,வாழ்நாள் முழுதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டுக் கிடந்த நம்மை விடுவிக்க அடிமையின்...

இயேசு கிறிஸ்து நமக்காக சாவை ருசித்து ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் மனுக்குல மைந்தனாய் நமக்காக வந்து நம்முடைய பாவங்களை போக்கி நம்மை மீட்டு தமது தந்தையிடம் அழைத்து செல்ல தம்மையே ஜீவ பலியாக இந்த நாளில் ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டெடுத்த நாள். நமக்கு முன் மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்த அவரின் வாழ்க்கையை பாடமாக வைத்து நாமும் அவரின் பாதையில் நடப்போமாக. நேற்றைய தினத்தில் பாஸ்கா திருவிருந்தில் தமது சீடர்களோடு கலந்துக்கொண்டு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி அதைப்பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைபெற்று உண்ணுங்கள்: இது எனது உடல், என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்: பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில் தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்: அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சொல்கிறேன், என்றார். அதன்பின்னர் இயேசு தமது சீடர்களோடு கெத்சமனி என்னும் இடத்திற்கு போய் அங்கே...

நமக்காக பஸ்காவை ஆயத்தப்படுத்தினார்

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்க தம்மை ஒப்புக்கொடுத்து பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்கிறார்.பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று அர்த்தம். அதாவது நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்கு அர்ப்பணித்து நம்மை விட்டு கடந்து தமது தந்தையிடம் பரலோகம் செல்கிறார். நமது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தாரானால் அவர் நம்மை விட்டு செல்லுமுன் நாம் அவரை உபசரித்து அனுப்புவோம். அதுபோல்தான் ஆண்டவரும் ஒரு நண்பராய் வந்து நம்மையெல்லாம் உபசரித்து நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் மீட்டு இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றுள்ளார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் 430 வருஷம் அடிமைகளாய் இருந்து மாதங்களில் தலையாயது மாதமான முதல் மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட ஆண்டவர் ஆயத்தப்படுத்தின மாதம். எகிப்தை விட்டு இஸ்ரயேல் மக்கள் கானான் தேசத்துக்கு ஆண்டவர் அவர்களை அத்தேசத்திலிருந்து கடந்து செல்ல உதவுகிறார். கசப்பை உண்ட தமது மக்களுக்கு இனிப்பை அருளிய நாள். அதனால்தான் அந்த நாளில்...