கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்.லூக்கா 11 : 9.
இயேசுகிறிஸ்து தெய்வ மகனாய் இந்த உலகத்தில் வந்து அவரின் சாயலாய் படைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரும் மேலும் அன்புக்கூர்ந்து நமது தேவைகளைச் சந்தித்து நம்மை அளவில்லாமல் ஆசீர்வதித்து காத்து வருவதோடல்லாமல்,இந்த நாளிலும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து என் மகனே! என் மகளே! உனக்கு என்ன வேண்டும் கேளுங்கள் அப்பொழுது அவைகளை உங்களுக்கு கொடுக்க ஆவலாய் இருக்கிறேன் என்று சொல்கிறார். கேட்கிற யாவருக்கும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார். அது எப்பேற்பட்ட காரியமானாலும் அவருக்கு இலேசான காரியம். அவரின் சித்தப்படி கேட்டால் இன்னும் கூடுதலான ஆசீர்வாதத்தை நாம் பெற்ற்றுக்கொள்வது உறுதியான விஷயம்.அதில் அதிகப்படியான ஆசீரை காணலாம்.என் வாழ்க்கையில் இதை கண்டிருக்கிறேன். என்னைத்தேடி வந்து மீட்டு இதுவரை அவரின் கண்ணின் மணியைப்போல் காத்து வழிநடத்தி வருகிறார். நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய 20 வது வயதில் தான் இயேசு ஒரு கடவுள் என்று தெரியும். மற்ற கடவுளைப் போல் அவரும் ஒரு கடவுள் என்று நினைத்தேன். அதனால் நான் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். அவரின் வார்த்தையாகிய வேதத்தை வாசிக்கவில்லை. எனக்கு...