Category: இன்றைய சிந்தனை

கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமொழிகள் 18:10

ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை.அவருக்கு அஞ்சி நடப்பவர் அதற்குள் சென்று அடைக்கலம் பெறுவார். நீதிமொழிகள் 18:10.ல் வாசிக்கிறோம். அவருடைய பெயரை நாம் உச்சரித்தாலே நமக்கு மிகுந்த சமாதானமும், சந்தோசமும் உண்டு. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச் செய்து உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமை படுத்துவாய் சங்கீதம் 50:15ல் உள்ளபடி அவரை யே அண்டிக்கொண்டு சுகமாயிருப்போம் ஒரு குழந்தை எப்படி ஒரு வேற்று மனிதரை கண்டால் தன் தாயிடம் ஓடி தமது முகத்தை மறைத்து அவர்களை இருக்க அணைத்துக்கொள்ளுமோ, நாமும் ஒரு குழந்தையாய் ஆண்டவரின் பாதங்களை இறுகப்பற்றிக்கொண்டு அவரிடம் அடைக்கலம் புகுந்தால் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக் கொள்வார். கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தி அவரிடம் தஞ்சம் புகுந்தால் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தி ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஏனெனில் அவர் நம்மேல் கவலைக்கொண்டு நம்மை விசாரிக்கிற ஆண்டவர். நமது கவலை எல்லாம் அவரிடம் ஒப்புக்கொடுத்து அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர்...

தூய ஆவியையை பெற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது நம்பிக்கையுடன் கேட்டால் கேட்டதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். மத்தேயு 21:22. தூய ஆவியை நாம் பெற்றுக்கொண்டால் ஆவியானவர் எல்லா காரியங்களிலும் நம்மோடு கூடவே இருந்து நாம் நடக்க வேண்டிய பாதையையும், செய்ய வேண்டிய செயல்களையும் நமக்கு உணர்த்துவார். நாம் தவறு செய்யும்பொழுது அது தவறு என்று நம் இதயத்தில் உணர்த்தி நம்மை நல்வழிப்படுத்துவார். ஆவியானவர் இருக்கும் இடத்தில் நிச்சயம் விடுதலை உணடு. 1 கொரிந்தியர் 3:16. பாவிகளுக்கு கடவுள் செவிசாய்ப்பதில்லை: இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவுசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.யோவான் 9 : 31.ஆகையால் அன்பானவர்களே! உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை தந்தருள்வார். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆகையால் நாமும் அவர்மீதே அன்புக்கொண்டு அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போம். நமக்கு உதவும் பொருட்டே நம்மோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை நமக்கு அருளும்படி செய்திருக்கிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம்...

இரக்கம் காட்டும் ஆண்டவர்

நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்:ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். எசாயா 54:7.ல் வாசிக்கிறோம். ஆண்டவர் நம்மேல் வைத்துள்ள பேரிரக்கத்தால் அனுதினமும் நமக்கு ஒரு பொல்லாப்பும் நேரிடாமல் காத்து வருகிறார். நம் தவறுகளுக்கு மன்னிப்பு அளிக்காமல் தண்டனை தருவாரானால் இந்த உலகில் ஒருவரேனும் இருப்போமா? என்று தெரியவில்லை. பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன். ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏசாயா 54:8 இமைப்பொழுது தமது முகத்தை மறைப்பதால் நாம் எவ்வளவு பாடுகளை, துன்பங்களை சந்திக்க வேண்டி உள்ளது. அந்த இமைப்பொழுதும் ஆண்டவர் மறைக்காமல் இருக்க நாம் அவர் விரும்பும்படி செய்து அவரின் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றுவோம். அப்பொழுது நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த காரியத்தையும் நம்மேல் வராமல் பாதுக்காத்துக்கொள்வார். நம்மேல் குற்றம் சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் அவர் அடக்கிபோடுவார். ஏனெனில் மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல நம்முடைய வழிமுறைகளைவிட ஆண்டவரின் வழிமுறைகளும் நமது எண்ணங்களைவிட ஆண்டவரின் எண்ணங்களும்...

அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார். நாகூம் 1:7

நாம் நமது பெற்றோரிடம் நமது விருப்பங்களை சொல்லும்பொழுது அவர்கள் நமக்கு செய்து தருவார்கள். சில சமயங்களில் அவர்களால் செய்யக் கூடாமல் போய்விடும். ஆனால் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தோமானால் நாம் விருப்புவதற்கும், நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாய் செய்வார். தாய் தன் குழந்தையை மறப்பாளோ? அவள் மறந்தாலும் நான் உன்னை மறக்கவில்லை என்று ஆண்டவர் நம்மை தாங்குவார். கோழி தமது குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல் நமது ஆண்டவரும் அவரின் இறக்கைக்குள் நம்மை மூடி பாதுக்காத்து ஒருதீங்கும் நம்மை தொடாதபடிக்கு அரவணைத்துக்கொள்வார். இருளில் இருந்த நம்மை ஒளியில் வரவழைத்து தமது முகத்தை நம்மேல் பிரகாசிக்கச் செய்து நம்மை அவரின் கிருபையால் தாங்கிக் கொள்வார். சில சமயம் நமக்கு ஏற்படும் துன்பங்களால் நாம் மனம் சோர்ந்து போய்விடுகிறோம். எந்த ஒரு ஆசீர்வாதமும் பெற்றுக்கொள்ளும் முன்னே சில சோதனைகள் நமக்கு ஏற்படும். கிறிஸ்து இயேசுவும் தாம் பரலோகம் செல்லும் முன்னே சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு துப்பப்பட்டு, எத்தனை எத்தனை, அவமானங்கள், நிந்தைகள் ஏளனபேச்சுகளை சகித்தார். மரியா அவர்களும் கடவுளை பெற்றெடுக்கும் பாக்கியம்...

ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். கலா 6:2

இந்த உலகில் ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்திருக்கிறார். நாம் நமக்கு கொடுத்திருக்கும் வேலையில் மட்டும் நம் கவனத்தை செலுத்தி அதை உண்மையோடும், நேர்மையோடும் செய்து ஆண்டவருக்கு பயந்து செயல்படுவோம். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருடனும் கூடவே இருந்து நம்மை கண்ணோக்கிக்கொண்டு தான் இருக்கிறார். நம் செயல்களை ஆராய்ந்துப் பார்த்து நம்மைபிறரோடு ஒப்பிடாமல் நம்மையே பெருமை பாராட்டாமல் நம் சுமையைத் தாங்கிக்கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை பிறர்க்கு செய்து அவர்களுடைய சுமையையும் தாங்கிக்கொள்வோம். இதற்காகவே ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார். ஒரே சபையாக ஒரே குடும்பமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பின் பாதையில் நடந்து ஆண்டவரின் திருநாமத்திற்கு புகழையும், மகிமையையும் சேர்த்து, நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் ஆண்டவரின் மேல் நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்துக்கு நன்மை செய்ய முன் வருவோம்.அவர்களின் சுமைகளை நாமும் தாங்கினால் அப்பொழுது ஆண்டவர் நம்மேல் இன்னும் அன்பு வைத்து நம்மை அதிகதிகமாய் ஆசீர்வதிப்பார். சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துனை நன்று. எத்துனை இனியது. அது ஆரோனின் தலையினிலே ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை...