நம்முடைய பெற்றோரை மதித்து அன்புக்காட்டி நடப்போம். வி.ப.20:12
கடவுள் நமக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும், உன் தாயையும், மதித்து நட என்பதாகும். விடுதலை பயணம் 20 : 12. சிலசமயங்களில் நாம் நம்முடைய பொறுமை-யின்மையால் அவர்கள் மேல் கோபம் கொண்டுவிடுகிறோம். நம்மை பெற்றெடுத்து நம்மை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவர அவர்கள் எவ்வளவோ தியாகங்களை செய்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது. ஒரு சின்ன கதையை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். ஒருநாள் ஒரு தந்தையும், மகனும் வீட்டின் ஜன்னல் அருகே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த தந்தைக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாகிவிட்டது. அந்த ஜன்னலின் தொலைவில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அது கருப்பாக இருந்ததால் தந்தை மகனை நோக்கி அங்கு ஏதோ கருப்பாய் உட்கார்ந்திருக்கிறதே ! அது என்ன என்று கேட்டார்? அப்பொழுது மகன், அப்பா அது ஒரு காகம் என்று சொன்னான். தந்தைக்கு வயதாகிவிட்டதாலும் தான் கேட்டதை மறந்துவிட்டதாலும் மறுபடியும் கொஞ்ச...