நம்மைக் காண்கிற தேவன் உறங்குவதுமில்லை,தூங்குவதுமில்லை
விண்ணையும்,மண்ணையும்,உண்டாக்கிய ஆண்டவரிடத்தில் இருந்தே நமக்கு உதவி கிடைக்கும். ஏனெனில் அவரே நம்முடைய கால்கள் இடறாதபடிக்கு பார்த்துக்கொள்வார். அவரே எப்பொழுதும் நம்முடைய வலப்பக்கத்தில் இருந்து, நமக்கு நிழலைப்போல் நம்மோடு கூடவே இருந்து நம்மைக்காத்துக்கொள்வார். நல்ல ஆயனாக,ஒரு தாயாக இருந்து நேற்றும்,இன்றும், நாளையும் காப்பவர் அவரே. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்ப்போல், அவரின் தலையில் முள்முடியை நமக்காக ஏற்றுக்கொண்டார். எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி பூங்கொத்தின் வாசனைப்போல் மணம் வீசி தமது இரத்தத்தால் நம்முடைய பாவத்தின் அழுக்கை நீங்கச்செய்து நறுமண தைலத்தால் நம்மை அலங்கரித்து நம் இதயத்தில் வாசம் செய்து சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருபவர் அவரே. வானத்தின் நட்சத்திரங்களை ஒளிரச் செய்கிற தேவன் தூங்காமல், உறங்காமல், நம்மையும் நமது வாழ்க்கையும் ஒளிரச் செய்கிறார். அவரிடம் அன்புக் கொள்ளுகிறவர்களுக்கென்று அவர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற காரியங்கள் இதுவரை நம் கண்ணுக்கு புலப்படவில்லை. நமது செவிக்கு எட்டவுமில்லை. மனிதனின் உள்ளமும் அதை அறிந்துக்கொள்ளவில்லை. இவைகளை தூய ஆவியானவர் மூலமாகவெ நமக்கு வெளிப்படுத்துவார். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் இவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு...