இந்நாள் நல்ல செய்தியின் நாள். 2 அரசர்கள் 7:9
ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அவரின் வார்த்தைக்கு பயந்து கீழ்படிந்து நடக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாளின் செய்தி நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் ஏதாவது ஐயம் உண்டோ! ஒருநாள் சமாரிய நகர வாயிலில் எலிசா ஆண்டவரின் வாக்கை கூறி ஆண்டவர் கூருவது இதுவே: ” ஒரு மரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக் காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும்,விற்கப்படும் என்று கூறினார். அப்பொழுது அரசனின் உதவியாளன் அவரிடம், இதோ பாரும்! எலிசாவே ஆண்டவர் வானத்தின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்கிறான்.அதற்கு எலிசா இதை உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்,என்று சொன்னார். 2 அரசர்கள் 7:1,2 ஆகிய வசனத்தில் வாசிக்கலாம். ஆம்,ஆண்டவரின் வார்த்தை ஒருபோதும் மாறாது. அது சொன்னால் சொன்னதே!அது வெறுமையாய் திரும்பி வரவே வராது. எலிசா சொன்னதுபோல ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக்காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும், விற்கப்பட்டது. அந்த அரசனின் அதிகாரி தன் கண்களால் காண நேரிட்டது. ஆனால் எலிசா சொன்னது போல...