இன்றைய சிந்தனை : வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள். யோவான் 7 : 24
மனிதர்களாகிய நாம் அநேக வேளைகளில் அவசரப்பட்டு வார்த்தையை சொல்லிவிடுகிறோம். அதனால் அடுத்தவர் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்று யாருமே சிந்திப்பதில்லை. அதனால்தான் வேத வசனம் இவ்வாறாக சொல்கிறது. என் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதைத்தெரிந்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும், சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும் என்று யாக்கோபு 1 : 19 ல் படிக்கிறோம். உள்ளத்தின் நிறைவே வாய் பேசும். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண்வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் வார்த்தையைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும், கருதப்படுவீர்கள் என்று மத்தேயு 12: 36 & 37 ஆகிய வசனத்தில் படிக்கிறோம். ஒருநாள் ஒரு தாயார் தமது 15 வயது நிரம்பிய தன் மகளோடு ரயிலில் வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பக்கத்தில் இன்னும் பல பேர்கள் அமர்ந்து பிரயாணம் செய்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அந்த பெண் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். அவளுக்கு மரம், செடி,...