Category: இன்றைய சிந்தனை

சகோதர அன்பு

நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார்,என்று பாருங்கள். 1 யோவான் 3:1. ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை.அவருடைய சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய் அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார். உடல் ஒன்றே: உறுப்புகள் பல,உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம்.1 கொரிந்தியர் 12:12; 13. நீங்கள் யூதரா?கிரேக்கரா? செல்வந்தரா?அடிமையா?நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன் கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை, கலாத்தியர் 5:20. இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம்.ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்மை, நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும்.கலாத்தியர் 5:22 .நாமும் அவருடைய உறுப்பாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லையே! ஒருவர் மற்றவர்களுடைய சுமைகளை தாங்கிக் கொள்ளுவோம். அவர்களோடு ஒப்பிட்டு பெருமை பாராட்டாமல் இயேசுகிறிஸ்து நமக்காக...

இன்றைய சிந்தனை :கடவுளை அறியும் அறிவையே பெற்றுக்கொள்வோம்

உண்மையாகவே கடவுள் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறார்; அவரைப்பற்றிய அறிகிற அறிவினால் அதை தெரிந்து கொள்ளலாம். நாம் அறிவடைவோமாக,ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும்,நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார் ” ஓசேயா 6 : 3. கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றையே. நம்முடைய அன்பு எப்படிப்பட்டது? நம் உள்ளத்தை ஆராய்ந்து அறிந்து நம்மை அர்ப்பணிப்போம். நம்முடைய அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்து போகாதப்படிக்கு காத்துக் கொள்வோம். நம் இதயத்தை ஆண்டவரிடமே திருப்புவோம். நம்மைக் காயப்படுத்துகிறவரும் அவரே, நம்மை குணமாக்குபவரும் அவரே, நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, நம்முடைய காயங்களை கட்டுகிறவரும் அவரே.அவருடைய தழும்புகளால் குணமாகச் செய்கிறார். அப்படிப்பட்ட இறைவனின் திருவுளத்தை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை சொல்லித் தெரியனுமோ! நாம் ஒவ்வொருவரும் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய வேண்டும். அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராக...

யார் விசேஷித்தவர்கள் ?

இன்றைய சிந்தனை நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கேன்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கேன்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் வாழ்வோர் மீதும் இறந்தோர் மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். உரோமையர் 14 : 7. அன்றியும் நம்மை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? நமக்கு உள்ளதை நாம் பெற்றுக்கொள்ளாதது எது? ஒருவேளை அதைபெற்றுக்கொண்டால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மைvபாராட்டவேண்டும்? எல்லோர் மீதும் ஆட்சி செலுத்தும் இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தி நம்மையெல்லாம் அவருடைய பிள்ளைகளாக விஷேசித்து வைத்திருக்கிறார். இந்த உலகில் அவரை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கும் யாவரும் விசேஷித்தவர்களே! அப்படியிருக்க நம்முடைய சகோதரர், சகோதரிகளிடம் நாம் குற்றம் சொல்லாமல் அவர்களை இழிவாக நினைக்காமல் நாம் அனைவருமே கடவுளின் முன்னிலையில் சரிசமமாக  நிறுத்தப்படுவதால் ஒருவரை ஒருவர் உயர்வாக எண்ணுவோம். அப்பொழுது நாம் ஆண்டவரின் பார்வையில் விஷேஷித்தவர்களாக இருப்போம். “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பே நீங்களும்...

எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?

பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ ? என்று நீதிமொழிகள் 29 : 26 ல் வாசிக்கிறோம்.ஏனெனில் நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் ஆண்டவர் அறிந்து வைத்து உள்ளார். அவருக்கு தெரியாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடைபெறாது. நாம் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்புநாளில் கணக்கு கொடுக்க வேண்டும் என இயேசு மத்தேயு 12 : 36 ல் சொல்லியிருக்கிறார். நம்முடைய வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படும்..பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர்கள் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும். ஏனெனில் நமக்கெல்லாம் நியாயம் வழங்குபவர் அவர் அல்லவா!! ஆண்டவர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அவர் நினைத்து செயலாற்ற நினைக்கும் எந்த காரியத்தையும் நம்மால் தடுக்க முடியுமா? யோபு 42 : 2 . அவருடைய செயல்கள் நமக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. அவரைப்பற்றிய அறிவு நமக்கு எல்லாம் உன்னதமானது; நம்...

இயேசுகிறிஸ்து வழியாக நமக்கு வெற்றி கொடுக்கும் கடவுளுக்கு நன்றி

கடவுள் இயேசுகிறிஸ்து வழியாக மனித இனம் முழுவதும் வெற்றி வாகை சூடியவர்களாக புதிய உலகமாகிய விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லவே இந்த பூமிக்கு வந்து ஒரு மனிதனை போல பல பாடுகளை அனுபவித்து நமக்கு முன்மாதிரியை காண்பித்து சென்றுள்ளார். ஏனெனில் ஒரே மனிதனால் பாவம் இந்த உலகில் வந்தது. ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானதுபோல, ஒருவரின் கீழ்படிததால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். ஆனால் குற்றத்தின் தன்மை வேறு அருள்கொடையின் தன்மை வேறு. ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள் கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு. அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு, எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ...