Category: இன்றைய சிந்தனை

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு அடைக்கலம் உண்டு

ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை. அவருக்கு அஞ்சி நடப்பவர் அதற்குள் சென்று அடைக்கலம் பெறுவார். நீதிமொழிகள் 18:10.ல் வாசிக்கிறோம். அவருடைய பெயரை நாம் உச்சரித்தாலே நமக்கு மிகுந்த சமாதானமும்,சந்தோசமும் உண்டு.ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச் செய்து உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமை படுத்துவாய் சங்கீதம் 50:15ல் உள்ளபடி அவரையே அண்டிக்கொண்டு சுகமாயிருப்போம் ஒரு குழந்தை எப்படி ஒரு வேற்று மனிதரை கண்டால் தன் தாயிடம் ஓடி தமது முகத்தை மறைத்து அவர்களை இருக்க அணைத்துக்கொள்ளுமோ. நாமும் ஒரு குழந்தையாய் ஆண்டவரின் பாதங்களை இறுகப்பற்றிக்கொண்டு அவரிடம் அடைக்கலம் புகுந்தால் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக் கொள்வார். கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தி அவரிடம் தஞ்சம் புகுந்தால் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தி ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஏனெனில் அவர் நம்மேல் கவலைக்கொண்டு நம்மை விசாரிக்கிற ஆண்டவர். நமது கவலை எல்லாம் அவரிடம் ஒப்புக்கொடுத்து அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர் பதில்...

மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் மாறுவோம்

இந்த உலகில் இயேசு வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் இயேசுவை அணுகி விண்ணரசில் யார் பெரியவர் என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப்போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர். இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று மத்தேயு 18 – 1 to 5 வரை வாசிக்கிறோம். நாமும் இந்நாளில் ஆண்டவர் விரும்பும் வண்ணம்நாமும் ஒரு சிறு குழந்தையைப் போல் மாறுவோம். அப்பொழுது நம் ஆண்டவர் நம்மை உயர்ந்த கன்மலையின் மேல் நிறுத்துவார். இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன் எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். ஆனால் எவ்வளவு நான் வருந்தி அழைத்தேனோ அவ்வளவாய் என்னை விட்டு தூரமாய் போனார்கள் பாகால்களுக்கு பலியிட்டார்கள். சிலைகளுக்கு தூபம் காட்டினார்கள். அவர்களை நடை பயிற்றுவித்ததும் நானே அவர்களை கையில்...

நன்றியோடு துதிப்போம்

விண்ணையும், மண்ணையும் படைத்த தேவன் இந்த ஆகஸ்ட் மாதம் முழுதும் நம்மோடு இருந்து பாதுகாத்து ஒரு சேதமும் இல்லாமல் காத்து வழிநடத்தி வந்திருக்கிறார். நேற்று இருக்கும் ஒருவர் இன்று இருப்பது நிச்சயமில்லாத உலகத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கோம். அப்படியிருக்க நாம் ஆண்டவரை துதித்து போற்றும்படி அவர் நமக்கு தம்முடைய ஜீவனைக் கொடுத்து தமது செட்டைகளின் மறைவில் வைத்து காத்து அடுத்த மாதமாகிய செப்டம்பர் மாதத்தை காண கிருபை அளித்துள்ளார். அவரை நன்றியோடு துதிப்போம். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்சனை. கவலை இல்லாத , தேவைகள் இல்லாத மனிதர்களே இல்லை. நம்முடைய ஒவ்வொரு தேவைகளையும் நமக்கு வெற்றி கரமாக செய்து கொடுக்கவே நம் ஆண்டவர் நம்மை காண்கிற தேவனாக இருந்து கரம் பிடித்து வழிநடத்துக்கொண்டு இருக்கார். நாம் நமது பாரங்களை அவர் பாதம் வைத்துவிட்டு நிம்மதியோடு அவரைப் போற்றித் துதிப்போம். ஏனெனில் அவர் துதிகளின் நடுவே இருக்கும் ஆண்டவர், அவர் விரும்பும் காரியமும் அதுவே. நாம் எல்லா தேவைகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவரை நம்பி துதிக்கையில் மனமிரங்கும் தேவன் தமது அளவற்ற...

தூய ஆவியால் நிரம்புவோம்

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். என்று லூக்கா 4 – 1 ல் வாசிக்கிறோம். கடவுளின் பிள்ளையாய் வந்த அவரே தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின்தான் ஊழியத்தில் ஈடுபட்டார். ஆண்டவராகிய அவருக்கே தூய ஆவி தேவைபட்டது என்றால் நாம் ஒவ்வொருவரும் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வது எத்தனை அவசியமானது என்று நாம் ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும். பரிசுத்த ஆவி நமக்கு கிடைக்குமா? என்று யோசிக்கிறீர்களா? நாம் நமது ஆண்டவரிடம் கேட்டால் நிச்சயம் நமக்கு தருவார். ஏனெனில் கேட்டவர் எல்லாரும் பெற்றுக்கொள்வர். தட்டுவோருக்கு திறக்கப்படும். நீங்கள் யாராவது உங்கள் பிள்ளை மீனை கேட்டால் பாம்பை கொடுப்பீர்களா? அல்லது முட்டையை கேட்டால் தேளைக் கொடுப்பீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கும்பொழுது ஆண்டவர் தூய ஆவியை நமக்கு கொடுக்காமல் இருப்பாரா?தூய ஆவியை கொடுப்பது எத்தனை உறுதி. லூக்கா 11ம் அதிகாரம் 9 லிருந்து 13 வரை,வாசிக்கலாம். தூய ஆவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்பொழுது உங்கள் வாழ்க்கையே தலைகீழாக...

கடவுளின் வாக்கை நம் இதயத்தில் பதிப்போம்.சங்கீதம் 119 – 11

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் கடவுள் நம்முடைய வேண்டுதல்களை கேட்டு நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஆவல் உள்ளவராய் நமது அருகில் இருந்து பார்த்துக்கொண்டு என் மகனே,என் மகளே,உனக்கு என்ன வேண்டும்?நீ கேட்பதை தர ஆவலாய் இருக்கிறேன் நீ என் சித்தப்படி கேட்டால் அதை உனக்கு நிச்சயம் தருவேன்,என்று சொல்கிறார்.ஆகையால் நாம் அவர் நமக்கு அருளிய வாக்கின் படியே கேட்டு அவரிடத்தில் இருந்து நமக்கு தேவையான ஆசீர் வாதங்களை எல்லாம் கேட்டு பெற்றுக்கொள்வோமாக! ஆண்டவர் நம்மை எந்த அளவு நேசிக்கிறாரோ அந்த அளவு நம்மை சோதித்து பார்ப்பார்.நாம் அதை அறிந்து எந்த சோதனையிலும் மனம் சோர்ந்து போகாமல் அவரின் பாதமே தஞ்சம் என்று அவரையே பற்றிக்கொண்டால் நமக்கு மனம் இரங்கி,நம் மேல் மனதுருகி நம் வேண்டுதலை நமக்கு அருளிச் செய்வார்.ஒரு சிறு குழந்தையை ஒரு தாய் குழந்தையின்...