Category: இன்றைய சிந்தனை

முன்னோடியின் பணிகள் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25) செக்கரியாவுக்குக் காட்சி தரும் வானதூதர் அவருக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையான திருமுழுக்கு யோவானைப் பற்றி முன்னுரைப்பதை வாசிக்கிறோம். இந்த அறிவிப்பில் இயேசுவின் முன்னோடியான யோவானின் பண்புகளை வானதுhதர் வரிசைப்படுத்துகிறார். (1) அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். (2) அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். (3) மது அருந்த மாட்டார். (4) துhய ஆவியால் ஆட்கொள்ளப்படுவார். (5) மக்களை ஆண்டவரிடம் திரும்பி வரச்செய்வார். (6) துணிவும் ஆற்றலும் மிக்கவராய் இருப்பார். (7) மக்களிடையே ஒப்புரவை உருவாக்குவார். (8) நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச்செய்வார். (9) இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்புடைய மக்களை ஆயத்தம் செய்வார். இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், இந்த வருகையின் காலத்தில், நாமும் இயேசுவின் முன்னோடிகளாக, ஆண்டவரின் வருகைக்குப் பிறரை ஆயத்தம் செய்பவர்களாக மாற்ற வேண்டாமா? எனவே, நாமும் இந்த ஒன்பது வகையான வழிகளில் மக்களை ஆயத்தம்...

இயேசு என்னும் மீட்பர் !

அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பது வானதூதரின் செய்தி. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பவர் என்பதே அவரது பெயரின் பொருள். கிறிஸ்துமஸ் விழா தரும் செய்தியும் இதுவே. அவர் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பார், விடுவிப்பார். நமது பாவங்களிலிருந்து நாம் நமது சொந்த முயற்சியினால் விடுதலை பெற முடியாது. நமது இயல்பே பாவம் செய்வதற்கேற்ற இயல்பாக அமைந்திருப்பதால், நமது சொந்த ஆற்றலால் விடுதலை பெறவும் இயலாது. எனவே, இயேசுவின் அருளை நாடுகிறோம். அவரது மீட்புக்காக வேண்டுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, நமது வாழ்வில் அவரது மீட்பு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று சிறப்பாக மன்றாடுவோம். மன்றாடுவோம்: மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் Nபுhற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்குவதாக....

இயேசுவின் தலைமுறை அட்டவணை !

மத்தேயு நற்செய்தி இயேசுவின் தலைமுறை அட்டவணையோடுதான் தொடங்குகிறது. ஒரு மனிதரின் தலைமுறை வரிசையை எண்ணிப் பார்ப்பது, மத்தேயுவின் காலத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதுபோலவே இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் முக்கியமானதாகத்தான் இருக்கிறது. ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு. நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே,...

இறைவார்த்தையின் மீதுள்ள தாகம்

யோவான் தன்னுடைய சீடர்களை அனுப்பி, இயேசு தான் மெசியாவா? என்று கேட்டுவரச் சொல்கிறார். இந்த பகுதி சில சந்தேகங்களையும் எழுப்புகிறது. இயேசு செய்த புதுமைகளைப் பார்த்து சாதாரண மக்களும் அவரை மெசியாவாக நம்பிக்கொண்டிருக்கும்போது, யோவான் எப்படி புரிந்து கொள்ள முடியாமல் போக முடியும்? இருந்தபோதிலும், ஒரு சில விளக்கங்கள் இதற்கு சரியான தீர்வாக அமையும். திருமுழுக்கு யோவானுக்கு, இயேசு தான் மெசியா என்று தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் உணர்வதற்காக அவர்களை அனுப்பியிருக்கலாம். அதுபோல், மற்றொரு விளக்கமும் தரப்படுகிறது. யோவான் சிறைக்கம்பிகளுக்கு உள்ளே இருந்ததால், எக்காரணத்தைக் கொண்டும், மக்கள் இறையாட்சி பற்றிய செய்தி அறியாமல் இருக்கக்கூடாது, என்று மக்கள்பால் கொண்டிருந்த அன்பு, அவரை இந்த கேள்வியைக் கேட்கத் தூண்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திருமுழுக்கு யோவான், மக்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை இது வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்கிற தாகம், திருமுழுக்கு யோவானுக்கு சாகும்தருவாயில் கூட இருந்தது. மக்கள் நற்செய்தி இல்லாமல்...

சொன்னது ஒன்று… செய்தது இன்னொன்று !

இயேசுவின் படைப்பாற்றலில் வெளியான அற்புதமான இன்னொரு உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மூத்த மகன் போகவிரும்பவில்லை என்று சொன்னான். பின்னர் மனந்திருந்தி வேலைக்குச் சென்றான். இளையவனோ போகிறேன் என்று சொன்னான். ஆனால், போகவில்லை. கேட்போரின் வாயிலிருந்தே மூத்த மகனே தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் என்னும் பதிலை இயேசு வரவழைத்தார். திருப்பலியிலும், வழிபாடுகளிலும், இறைவார்த்தையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் விழிப்பூட்டும் ஓர் உவமையாக இது அமைகின்றது. நம்மைப் போன்றவர்கள் அந்த மூத்த மகனைப் போல அல்ல, இளைய மகனைப் போலவே செயல்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நிறைவோற்றுவோம் என்று வாயால், மனதால் உறுதி கொள்கிறோம். ஆனால், சொன்னதுபோல, செயல்படுவதில்லை. மனித பலவீனத்தால், ஆர்வக்குறைவால், அ;ல்லது சோதனைகளின் சோர்வால் தடம் புரண்டுவிடுகிறோம். எனவே, ஆலயத்துக்கே வராதவர்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டாதவர்கள், இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்— ஆனால், இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை...