சொந்த ஊரில் !
இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இறைவாக்கினர்களை மட்டுமல்ல, சிந்தனையாளர்களை, சாதனையாளர்களைக்கூட அவரது சொந்த ஊர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றது. ஏன்? அதுதான் முற்சார்பு எண்ணம். ஒருவரது பெற்றோர், குடும்பப் பின்னணி, வாழும் சூழல் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது ஆளுமையையை, செயல்பாட்டைக் கணிக்கின்ற தவறை மானிட சமூகம் காலம் காலமாகச் செய்து வருகிறது என்பதனை இயேசுவின் காலத்திலிருந்து இந்நாள்வரை நிலவும் இந்தச் சமூகத் தீமையைக் கொண்டு நாம் அறிகிறோம். ஒவ்வொரு மனிதரும் அவரவர் மதிப்பீடுகளால், செயல்பாடுகளால், இயல்புகளால் மட்டுமே கணிக்கப்பட வேண்டும். மாறாக, அவர்களது பெற்றோர் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பன போன்ற தரவுகளால் அல்ல. ஆனால், இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்த மக்கள் இந்தத் தவறினைச் செய்தனர். அதுபோல, இன்றும் ஒவ்வொரு குடும்பத்திலும், பங்கிலும், தொழிலகத்திலும், ஊரிலும் இத்தகைய தவறுகள் நடந்துகொண்டே இருக்கலாம். எனவே, இன்று நான்...