அடுத்தவர் உணர்வுகளை சரியாகப்புரிந்துகொள்வோம்
‘நான் போகும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று இயேசு சொல்கிறார். இயேசு சொன்னதின் பொருள்: மகிமையோடு அவர் தந்தையாகிய கடவுளிடம் திரும்புகிற இடத்தை. ஆனால், அவருடைய எதிரிகள் புரிந்துகொண்டது: இயேசு நரகத்திற்கு போகப்போகிறார் என்று. ஏனெனில் தற்கொலை செய்வோர் அனைவரும் நரகத்திற்குச்செல்வார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, இயேசு தற்கொலை செய்துகொண்டு நரகத்திற்குப்போகப்போகிறார். நம்மால் அங்கே செல்ல முடியாது என்பதை இயேசு சொல்வதாக, யூதர்கள் நினைத்தனர். இயேசு சொன்னது ஒரே செய்திதான். ஆனால், அது புரிந்துகொள்ளப்பட்ட விதம் வேறு, வேறானது. இங்கே புரிதலில் தவறு இருக்கிறது. இந்த நற்செய்திப்பகுதியில், யூதர்களின் தவறான புரிதலுக்கு காரணம் என்ன? எது சரியான புரிதல்? என்பதற்கான பதிலை நாம் பார்க்கலாம். ஒரு புத்தகம் வாசிக்கிறோம். அந்தப்புத்தகத்தை சரியாகப்புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த புத்தக ஆசிரியரின் எண்ண ஓட்டத்தோடு இணைந்து நாம் வாசிக்க வேண்டும். நமது எண்ண ஓட்டத்தில் நாம் வாசித்தால், அதனை சரியாகப் புரிந்துகொள்ள...