பாடுகளின் குருத்து ஞாயிறு
கடந்த வாரத்தில் தருமபுரி பேருந்து எரிப்பில் பலியான மூன்று கல்லூரி மாணவிகள் கோகுலவாணி, ஹேமலதா மற்றும் காயத்ரி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது, தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லாருமே எதிர்க்கிறோம். ஏனென்றால், கடவுள் கொடுத்த உயிரை, கடவுள் மட்டுமே எடுக்க உரிமை உண்டு. மரணதண்டனையும் ஒருவிதத்திலே கொலைதான். ஆனால், அந்த வழக்கு நடைபெற்ற விதம், அதிர்ச்சி அலைகளையும், நீதி செத்துவிட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. மூன்று குற்றவாளிகளும், தங்களின் கட்சித்தலைவிக்கு, நீதிமன்றம் தண்டனை கொடுத்தது என்பதற்காக, மாணவிகள் இருந்த பேருந்தை, வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தி, அவர்களை கொலை செய்தவர்கள். அவர்களின் தலைவி என்ன, ஏழை மக்களுக்காக போராடியா தண்டனை பெற்றார்? ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார். ஜனநாயக நாட்டில், தங்கள் எதிர்ப்பைக்காட்ட அவர்களுக்கு வேறு வழியே இல்லையா? அதற்கு மாணவிகள் பேருந்திற்குள் இருக்கிறார்கள் என்பது...