புதிய ஆவியைப் பெற்றுக்கொள்வோம்
புரியாமைக்கு இரண்டு காரணங்களைச்சொல்லலாம். 1. புரிகிற அளவுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமை. ஆனால், இது ஒன்றும் பெரிய குறை அல்ல. அதை மற்றவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப நாம் விளக்கிச்சொல்கின்றபோது புரிந்துகொள்வார்கள். 2. புரிய விரும்பாமை. புரிந்து கொள்வதற்கு அறிவிருந்தும், அதைக்கேட்காமல் வேண்டுமென்றே அதில் நாட்டம் இல்லாமல் இருக்கிற நிலை. நிக்கதேம் இந்த இரண்டாம் நிலையில் இருக்கிறார். நிக்கதேம் படித்தவர். உயர்குலத்தைச் சேர்ந்தவர். அறிவு மிகுந்தவர். கேட்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவர். இருந்தபோதிலும், இயேசு சொல்வதைப் புரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கிறார். புதுப்பிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு ஒன்றும் புதிதாக இருக்க முடியாது. ஏனெனில், அவர் மறைநூலை கரைத்துக்குடித்தவர். இறைவாக்கினர் எசேக்கியேல் தொடர்ச்சியாக புதிய இதயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார். எசேக்கியேல் 18: 31 “புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்”. மேலும், 36: 26 கூறுகிறது: “நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து...